Tuesday , October 22 2019
Home / District-News / ரேபிடோ பைக் டேக்சி சார்பில் இலவச ஹெல்மெட் வழங்கினர்

ரேபிடோ பைக் டேக்சி சார்பில் இலவச ஹெல்மெட் வழங்கினர்


ரேபிடோ பைக் டேக்சி சார்பில் ஹெல்மெட் அணிந்து குறித்து விழிப்புணர்வு

இலவச ஹெல்மெட் வழங்கினார்

கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையும், இணைந்து ரேபிடோ. பைக் டேக்சி சார்பில், ஹெல்மெட் அணிவது குறித்த வடகோவை சிந்தாமணி பகுதியில் உள்ள சிக்னல் முன்புறம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித்குமார் மற்றும் உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், போக்குவரத்து காவலர்கள் சதாசிவம், ராஜ்கண்ணா,
வெற்றிசெல்வன் மற்றும் ரேபிடோ பைக் டேக்சி மேலாளர் சரவணா, கோபிதாஸ், அருண், இந்திரராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் பொதுமக்கள் இலவசமாக 200 பேர்களுக்கு ஹெல்மெட்டுகள் வழங்கப்பட்டது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, சிக்னல்களை மதிக்க வேண்டும், வேகத்தைவிட பாதுகாப்பு முக்கியம் என இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும். மற்றும் நான்கு சக்கர வானங்களில் செல்லும் நபர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்த விழிப்புணர்வு முகாம் குறித்து போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார் கூறியதாவது :- பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும்.

கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில்
தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம்.

அதேபோல, மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு க்ஷநாங்கள் பரிந்துரை செய்துள்ளோம்.

இந்த ஆண்டு 24,439 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டதில் 14,431 பேரின் ஓட்டுநர் உரிமம் வட்டார போக்குவரத்து துறையால் ரத்து செய்யப்பட்டுள்ளது, என்றார்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
expressnewsruki@gmail.com
rukivaniphotographer@gmail.com

About Admin

Check Also

International Justice Mission – Palaivana Pookal- Mafoi Pandiarajan

Even after 44 years since the enactment of The Bonded Labour System (Abolition Act) 1976, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.