Tuesday , September 25 2018
Home / District-News / தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்பாட்டம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்பாட்டம்.

சென்னை. செப் 15:  ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமல்ல என்றும் 377 சட்டப் பிரிவை ரத்து செய்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், ஓரினச் சேர்க்கை முறை தடை செய்யப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம் 377 சட்டப் பிரிவை ரத்து செய்ததை திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்,  (செப் 14) சென்னை, சேப்பக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.    இதில் ஏராளமான ஆண்கள் உள்பட பெண்கள் மற்றும்  இளைஞர்கள் பங்கேற்று ஓரினச் சேர்க்கைக்கு எதிராக கோசமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் டிஎன்டிஜெ மாநிலத் தலைவர் எம்.ஷம்சுல்லுஹா பேசுகையில், ஆண், பெண் என்று இரு பாலினங்கள் சேர்வது தான் இயற்கை மரபாகும். ஓரினச் சேர்க்கை என்பது இயற்கை மரபை மீறிய அநாகரீகமான அறுவறுக்கத் தக்க செயலாகும். ஓரினச் சேர்க்கை முறையால் எய்ட்ஸ் உள்ளிட்ட பல உயிர் கொல்லி நோய்கள் ஏற்படும். ஆண், பெண் திருமணம் மூலம் சந்ததிகள் ஏற்பட்டு மனித குலம் பெருகும். ஒரே பாலின சேர்க்கையால் எதிர்கால சந்ததிகளின் நிலை கேள்விக்குறியாகும் என்றார்.

About Admin

Check Also

கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி பயிலரங்கம், கமல்ஹாசன் பங்கேற்பு

  கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு கோவை சுங்க கார்னர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.