Wednesday , February 20 2019
Home / Business / குழந்தைகளின் குதூகல பயணத்துக்கு புதிய வகை பொம்மைகளை அறிமுகப்படுத்தியது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்!

குழந்தைகளின் குதூகல பயணத்துக்கு புதிய வகை பொம்மைகளை அறிமுகப்படுத்தியது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்!

விமானங்களில் பயணிக்கும் குழந்தைகளின் குதூகல பயணத்துக்காக புதிய வகை பொம்மைகளை எமிரேட்ஸ் (Emirates)நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது:

குழந்தைகளின் விமானப் பயணம் இனிதாக அமைய வேண்டும் என்பதற்காக எமிரேட்ஸ் நிறுவனம்,கடந்த மூன்று ஆண்டுகளாகவே அதன் விமானங்களில் அனைத்து வகுப்புகளிலும்  பல வகையான பொம்மைகள் மற்றும் கிட் பேக்குகளை அளித்து வருகிறது.

அந்த வகையில், தற்போது  லூயிஸ்சிங்கம் (Lewis the Lion), பாண்டா,பெங்குவின், சவானா யானை ஆகிய நான்கு புதிய பொம்மை தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.இம்மாதத்திலிருந்து, நிறுவனத்தின் அனைத்து விமான வகுப்பு பயணிகளும் இந்த பொம்மைகள் கிடைக்கும்.

இரண்டு வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு வைப்ரேட்டிங் ப்லஷ் (vibrating plush) உள்ளிட்ட புதிய வகை பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.மூன்று முதல் ஆறு வயது வரையில் உள்ள சிறுவர்களுக்கு பஸில்ஸ்,கேம்ஸ் மற்றும் ஸ்டிக்கர் உள்ளிட்டவை வழங்கப்படும்.

ஏழு வயது முதல் 12 வயது வரையில் உள்ள சிறுவர்களுக்கு கல்வி பயண புத்தகம், செயல்முறையில் பிரத்யேகமாக எமிரேட்ஸ் வடிவமைத்துள்ள ஃபிளை வித் மீ லோன்லி பிளானட் ஆக்டிவிட்டி (Fly with Me Lonely Planet Kids activity bags)தொகுப்புகள் வழங்கப்படும்.

ஃபிளை வித் மீ பத்திரிகை தொகுப்பில் பஸில், ஜோக்குகள்,சிறுவர்களுக்கான ஆக்டிவிட்டி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.இவை மூன்று முதல் எட்டு வயது வரையில் உள்ள சிறுவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோர்கள் அவர்களை மகிழ்விக்கும் வகையிலான இனிமையான பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை பெற்று பயனடையலாம். சின்னஞ்சிறு குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோரின் பயணத்தை இனிமையாக்கும் வகையில் தேவையான, ஸ்பூன், சேஞ்சிங் மேட்,டயாபர் ராஷ் கிரீம் மற்றும் டயாபர் அடங்கிய பேக்குகள் வழங்கப்படும். இவ்வாறு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

About Admin

Check Also

Forevermark Diamond Jewellery Sparkles in Hollywood

Chennai, February 2019: Forevermark diamonds have consistently adorned celebrities on the world’s most important red …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.