Sunday , July 21 2019
Home / District-News / 72வது சுதந்திர தின விழாவில்; மாவட்ட ஆட்சித் தலைவர்

72வது சுதந்திர தின விழாவில்; மாவட்ட ஆட்சித் தலைவர்





72வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கோயம்புத்தூர்; வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்; மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.த.ந.ஹரிஹரன் , அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

அதனைத் தொடர்ந்து வேளாண்மைத் துறை மூலம் வேளாண் பொருட்கள் 5 பயனாளிகளுக்கு ரூ.66,477/- மதிப்பிலும், தோட்டக் கலைத் துறை மூலம் கோகோ நாற்றுக்கள் மற்றும் வெங்காய பட்டறை 3 பயனாளிகளுக்கு ரூ.1.87லட்சம் மதிப்பிலும், தாட்கோ மூலம் சுய தொழில் மேற்கொள்ள வண்டிகள் 5 பயனாளிகளுக்கு ரூ.26.93லட்சம் மதிப்பில் கடனுதவியும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் செயற்கை கால் ஒரு பயனாளிக்கு ரூ.25,500/- மதிப்பிலும், மகளிர் மேம்பாட்டுத் திட்டம் மூலம் தொழில் செய்தி கடனுதவி 10 பயனாளிகளுக்கு ரூ.10லட்சம் மதிப்பிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 8 பயனாளிகளுக்கு ரூ.79,680/- மதிப்பில் தையல் இயந்திரமும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.90,324/- மதிப்பில் சலவைப்பெட்டியும், வருவாய் துறை மூலம் 254 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையினையும், என மொத்தம் 304 பயனாளிகளுக்கு ரூ.41.42லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.ந.ஹரிஹரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் கே.பெரியய்யா, காவல் துனைத்தலைவர் பாரி, துனைத்தலைவர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாநகர காவல் துணை ஆணையர் லெட்சுமி, கோவை வடக்கு சார் ஆட்சியர் கார்மேகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ருப் சங்கராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சினேகா மற்றும் தேசபற்றாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர் #ருக்கிவாணி expressnewsruki@gmail.com rukivaniphotographer@gmail.com

Rukmani
Reporter

About Admin

Check Also

15 சைவ, வீரசைவ மடாதிபதிகள் செய்தியாளர் சந்திப்பு

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் சிலை கடத்தல் தொடர்பாக இந்து ஆச்சாரிய சபாவுடன் துறவியர் பேரவையை சேர்ந்த 15 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.