Sunday , January 19 2020
Home / Business / கிளென்மார்க் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் மற்றும் தரமான புற்றுநோய் சிகிச்சை

கிளென்மார்க் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் மற்றும் தரமான புற்றுநோய் சிகிச்சை

சென்னை, 2018, ஜுலை  : ஆராய்ச்சி செயல்பாடுகளை முதன்மையாக கொண்டு செயல்படும் உலகளாவிய ஒருங்கிணைக்கப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான கிளென்மார்க் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் மற்றும் தரமான புற்றுநோய் சிகிச்சை தயாரிப்புகளை உருவாக்குவது மீது கூர்நோக்கம் கொண்டு இயங்கும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹெல்ஸின் ஆகிய இரு நிறுவனங்களும் ஒரு பிரத்யேக லைசென்ஸிங் ஒப்பந்தத்தின்கீழ் இந்திய சந்தையில் அக்கின்சியோ® (AKYNZEO®,) என்ற மருந்து அறிமுகம் செய்யப்படுவதை இன்று அறிவித்திருக்கின்றன. புற்றுநோய் சிகிச்சையில் ஒரு அங்கமான ஹீமோதெரபியின் மூலம் தூண்டப்படுகிற குமட்டல் மற்றும் வாந்தியை (CINV) வர விடாமல் தடைசெய்கிற ஒரு நிர்ணயிக்கப்பட்ட அளவான கலவை மருந்துப்பொருளாக அக்கின்சியோ இருக்கிறது.

நெட்டுபிட்டன்ட் 300 மி.கி. மற்றும் பலோனோசெட்ரான் 0.5 கிராம் என்ற இரு மருந்துப்பொருட்களின் கலவையான அக்கின்சியோ, வாய்வழியாக உட்கொள்ள தரப்படக்கூடிய ஒரு ஒற்றை கேப்சூலாகும். CINV-ன் தீவிரமான மற்றும் தாமதிக்கப்பட்ட கட்டங்களோடு தொடர்புடைய இரு பிரதான பாதை வழிகள் இரண்டிலும் இந்த கேப்சூல் திறம்பட செயல்பட்டு வாந்தி மற்றும் குமட்டல் வராமல் தடுக்கிறது. ஹெல்ஸின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இத்தயாரிப்பை இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் சந்தையாக்கல் செய்வதற்கான பிரத்யேக சந்தையாக்கல் உரிமைகளை கிளென்மார்க் கொண்டிருக்கிறது.

‘புற்றுநோயியல், கிளென்மார்க் நிறுவனத்திற்கு கூர்நோக்கம் செலுத்துகின்ற முக்கிய பிரிவுகளுள் ஒன்றாக இருக்கிறது மற்றும் இந்திய நோயாளிகளுக்கு புதிய விருப்பத்தேர்வுகளை வழங்குவதில் நாங்கள் பொறுப்புறுதி கொண்டிருக்கிறோம். ஹீமோதெரபி சிகிச்சையோடு தொடர்புடைய குமட்டல் மற்றும் வாந்தி ஆகிய பாதிப்புகள் புற்றுநோயாளிகளின் வாழ்க்கைத்தரத்தின்மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொண்டிருக்கின்றன. மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சைகளை ஒரு நோயாளி இணக்கத்துடன் பின்பற்றுவது மீது இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அக்கின்சியோ என்பது ஒரு சௌகரியமான, ஒற்றை மருந்தளிப்பாக, வாய்வழியாக உட்கொள்ளக்கூடிய கேப்சூலாகும். வாந்தி மற்றும் குமட்டலை தடுப்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பல விருப்பத்தேர்வுகளை தவிர்க்கக்கூடிய இந்த கேப்சூல், ஹீமோதெரபி வழங்கப்படுகிற தீவிர மற்றும் தாமதிக்கப்பட்ட கட்டங்கள் இரண்டிலும் பயன்படுத்தக்கூடியதாகும். இதன்மூலம் நோயாளிகள் சிகிச்சைமுறையை சரிவர பின்பற்றும் இணக்கநிலையை இது மேம்படுத்துகிறது,” என்று கிளென்மார்க் நிறுவனத்தின் இந்தியா ஃபார்முலேஷன்ஸ், மத்தியகிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பிராந்தியத்திற்கான தலைவர் திரு. சுஜேஷ் வாசுதேவன் கூறினார்.

அக்கின்சியோ®, ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம், யுஎஸ் மற்றும் உலகின் வேறு பிற முன்னணி உலக சந்தைகளிலும் சந்தையாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

About Admin

Check Also

Leading German Car Manufacturer Chooses Getac for Worldwide Provision of Rugged Mobile Devices and Solutions

Chennai, January, 2020:  Getac, a leading rugged mobile computing manufacturer, today announced that it has been selected …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.