Tuesday , July 16 2019
Home / District-News / “குழந்தைகளுக்கான” மாரத்தான் போட்டி

“குழந்தைகளுக்கான” மாரத்தான் போட்டி





குழந்தை தொழில் ஒழிப்பு மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குறித்து விழிப்புணர்வை “குழந்தைகளுக்கான” மாரத்தான் போட்டி

வி.ஜே.ஈவண்ட் சார்பில் ரோஸ்கோஸ் பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடைபெற்றது.

இது குறித்து வேர் அமைப்பின் நிறுவனர் வசந்த் ஜெரோம் மற்றும் வேர் அமைப்பின் தலைவர் சந்தோஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது :
நாளுக்கு நாள் பெண் குழந்தைகளுக்கு எதிராக சமுதாயத்தில் நிறைய பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை மக்களிடத்தில் விழிப்புணர்வு- ஏற்படுத்துவதற்காக இந்த ஓட்டப்பந்தயத்தை குழந்தைகள் மூலம் நிகழ்த்தியுள்ளோம். இது எங்களுக்கு ஒரு புதுவித முயற்சியாகும்.

இதற்காக நாங்கள் 2வயது முதல் 8 வயது வரையுள்ள குழந்தைகளையும், 8 முதல் 16 வயது வரையுள்ள குழந்தைகளையும் வைத்து இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம்.

இதில் 3000 த்திற்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். குழந்தைகள் நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியினை மயூரா ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சுப்ரீம் மொபைல்ஸ் உரிமையாளர் சுப்ரீம் குணசேகரன், வேர் அமைப்பின் செயலாளர்கள் டேவிட், அரவிந்த் ஜெனித், கில்பர்ட் ஆகியோர் பங்கேற்றனர்.

மாரத்தான் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
expressnewsruki@gmail.com
rukivaniphotographer@gmail.com

Rukmani
Reporter

 

About Admin

Check Also

Bharatanatyam Performance by Augrima Ghosh & Shipra

Chennai, July 09, 2019: A centuries-old dance form that originated from Tamil Nadu, Bharatanatyam is …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.