பிஃபா உலக கோப்பை மாதிரியுடன்
சாக்கர் ரசிகர்கள் படமெடுக்கும் வாய்ப்பு.
பவிழம் ஜீவல்லர்ஸ் ஏற்பாடு.
கோவையில் உள்ள பவிழம் ஜீவல்லர்ஸ் பிஃபா உலகக் கோப்பையின் மாதிரியுடன் சாக்கர் ரசிகர்கள் படமெடுத்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து அதன் உரிமையாளர் லிஜோ எஸ்.சுங்கத் கூறியதாவது.
தற்போது ரஸ்யாவில் நடைபெற்று வரும் சாக்கர் இறுதிப் போட்டியில் வெல்பவர்களுக்கு பிஃபா உலகக் கோப்பை வழங்கப்படும்.இந்தக் கோப்பை 18 கேரட் தங்கம்,10 பவுண்டு எடை,14 இன்ச் உயரத்துடன் இருக்கும். இங்கிலாந்தில் உள்ள ஷோ-ரூம்களில் புட்பால் வீரர்களின் மெழுகுச்சிலை வடிவமைக்கப்பட்டு அங்குள்ள ரசிகர்கள் அதனுடன் படமெடுக்கும் நிகழ்ச்சி ஒரு திருவிழா போன்று நடக்கும்.
கோவை கிராஸ்-கட் ரோட்டில் உள்ள பவிழம் ஜீவல்லர்ஸ் சாக்கர் ரசிகர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கடந்த போட்டியின்போது போட்டோ ஷீட் நிகழ்ச்சியை நடத்தியது.
இதில் தினமும் சுமார் 300 பேர்கள் கலந்து கொண்டார்கள்.
அதேபோல் இந்த வருடமும் இங்கிலாந்திலிருந்து பிஃபா உலகக் கோப்பையின் மாதிரியை வரவழைத்து தனது ஷோ-ரூமில் காட்சிப்படுத்தியுள்ளது.
இதனுடன் கோவையில் உள்ள சாக்கர் ரசிகர்கள் இலவசமாகப் புகைப்படமெடுத்துக் கொள்ளலாம்.
மேலும் இதன் மூலம் அவர்கள் தாங்களே கோப்பையை வென்றது போல் உணர்வார்கள்.
அதுமட்டுமின்றி பவிழம் ஜீவல்லர்ஸின் கார் பார்க்கிங்கில் இறுதிப் போட்டியை ரசிகர்கள் கண்டு களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது உடன் ஷோ-ரூமின் மேலாளர் ஸ்டான்லி உடன் இருந்தார்.
கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]l.com
[email protected]