Thursday , July 19 2018
Home / District-News / அடியார் யோகா மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

அடியார் யோகா மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

click 4 weeks ago District-News Leave a comment 14 Views


 
கோவையில் உள்ள அடியார் யோகா மையத்தில் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கோவை திருச்சி ரோட்டில் கடந்த 4 ஆண்டுகளாக அடியார் யோகா மையம் இயங்கி வருகிறது.

இங்கு உடல் எடைக்குறைப்பு, கட்டுக்கோப்பான உடல், குழந்தைகள் முதல் வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நோய்த் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மனித உடல் ஆரோக்யத்துக்கான யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி கோவையில் முதல் முறையாக ஏரியல் யோகா என்ற பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டு ஹட்ஹா, வின்யாஷா, பவர், கிளாசிக் உள்ளிட்ட பயிற்சிகளுடன் மனித உடல் மற்றும் மனம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலான ஸ்வதிஸ்தானா, மூலாதாரா போன்ற சக்ரா பயிற்சிகள் யோகா மூலம் கற்றுத் தரப்படுகின்றன.

அடியார் யோகா மையம் சர்வதேசத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதி, சிறப்பு நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளர்கள் மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு யோகா பயிற்சியளித்து வருகிறது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்த மையத்தில் சிறப்பு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் மையத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் செந்தில் குமார் மற்றும் கே.சித்ரா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

கோவைலிருந்து செய்தியாளர் #ருக்கிவாணி [email protected] [email protected]

About Admin

Check Also

மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகவிழா

கோவை மாவட்ட த்தில் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகம் டவுன்ஹாலில் உள்ள ஹோட்டல் சான்மா வளாகத்தில் நடைபெற்றது. மாநில …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *