Wednesday , September 26 2018
Home / District-News / கோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கும்

கோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கும்



சர்வதேச யோகா தினம் யோகா விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி

கோவை ஒத்தகால்மண்டபம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் யோகா விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர் ஜி.ரமேஷ் வரவேபுரையற்றினர்.
சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் நிறுவனர் சி.சிவநேசன் சுற்றுச்சூழல் மாசுகட்டுவது குறித்து விளக்கினார்.
சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் தன்னார்வ நிறுவனத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு 98 வயது, பத்மபூசன் விருது பெற்ற வி.ஞானம்மாள் அவர்கள் கலந்து கொண்டு அங்கு பயிலும் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு, யோகாசனம் செய்து காண்பித்து யோகா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

யோகா பாட்டி செய்யும் யோகசனத்தை கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர், தொடர்ந்து பாட்டி செய்யும் யோகசனத்தை பின்பற்றி மாணவ, மனைவியரும் செய்தனர்.

பின்னர் மாணவ, மாணவிகளுக்கு யோகா செய்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்.

இதையடுத்து பள்ளி, மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் பள்ளி, ஆசிரியர்கள் மற்றும்
சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் அமைப்பினர் பாபு, ரவிக்குமார், பிரசாத், சுரோக்ஹா, திவ்யா, விஜய் மற்றும் பலர் கலந்து கொண்டார்.

விழா முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பி.மூர்த்தி நன்றி கூறினார்.

கோவைலிருந்து செய்தியாளர் #ருக்கிவாணி [email protected] [email protected]

About Admin

Check Also

கோவை மாநகர 24 காவல் நிலையங்களில் நூலகம் திட்ட துவக்க விழா

கோவை மாநகர 24 காவல் நிலையங்களில் நூலகம் திட்ட துவக்க விழா கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.