Wednesday , August 5 2020

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

  1. எண்ணூர் பகுதியில் லோடு வாகனத்தில் ஹான்ஸ் மற்றும் ஜர்தா புகையிலைப்பொருட்கள் கடத்தி வந்த 3 நபர்கள் கைது. 2.10 லட்சம் மதிப்புள்ள 692 கிலோ ஜர்தா மற்றும் ஹான்ஸ் புகையிலைப்பொருட்கள் 1 லோடு வாகனம் பறிமுதல்.

M-5 எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.C.புகழேந்தி , உதவி ஆய்வாளர் திரு.J.கணேஷ் , M-8 சாத்தங்காடு உதவி ஆய்வாளர் திரு.S.நந்தகுமார் உதவி ஆய்வாளர் திரு.G.கருணாகரன், ஆயுதப்படை காவலர்கள் திரு.P.மாரிமுத்து (கா.எண்.51715), திரு.A.அப்துல் பாஸித் (கா.எண்.52209) ஆகியோர் நேற்று (24.07.2020) காலை 10.30 மணிளவில் எண்ணூர், விரைவுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது , அங்கு சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த லோடு வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்த போது வாகனத்தில் வந்த மூன்று நபர்களும் முன்னக்குப்பின் முரணாக பதில் கூறினர். சந்தேகத்தின் பேரில் வாகனத்தை சோதனை செய்து போது வாகனத்தில் பெருமளவில் ஜர்தா மற்றும் ஹான்ஸ் புகையிலைப்பொருட்கள் எடுத்து வந்தது தெரியவந்தது. அதன் பேரில் பிடிபட்ட மூன்று நபர்களையும் M-5 எண்ணூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.ராணாசோட்ராம், வ/23, த/பெ.லாசாராம், எண்.99. ஆதித்தனார் நகர், நூறு குடோன் ரோடு, மாதவரம் 2.ஜோதிவேல், வ/28, த/பெ.ராதகிருஷ்ணன், எண்.30, பெருமாள் கோயில் தெரு, கிருஷ்ணமூர்த்தி நகர், கொடுங்கையூர் 3. பிர்லா போஸ், வ/28, த/பெ.பாலசுப்பிரமணி, எண்.38/128, கணக்கர் தெரு, திருவொற்றியூர் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள 692 கிலோ ஜர்தா, ஹான்ஸ் புகையிலைப்பொருட்கள் மற்றும் 1 லோடு வாகனம் பறிமுதல்.

  1. தரமணி பகுதியில் கடையில் மாவா விற்பனை செய்த நபர் மற்றும் அவருக்கு சப்ளை செய்த நபர் என இருவர் கைது. 50 கிலோ சீவல் பாக்குகள், 65 கிலேதா ஜர்தா, 5 கிலோ சுண்ணாம்பு, 5 கிலோ மாவா, 3 கிரைண்டர்கள், 1 மிக்ஸி, ரூ.2, 92, 000/- மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
    அடையார் காவல் மாவட்ட துணை ஆணையாளர் அவர்களின் தனிப்படையில் பணிபுரியும் J-10 செம்மஞ்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.E.ராமசுந்தரம், J-9 துரைப்பாக்கம் தலைமைக்காவலர் திரு.S.சங்கர் (தா.க.32301) J-9 துரைப்பாக்கம் முதல் நிலைக்காவலர் திரு.M.சண்முகம் (மு.நி.கா.32729) J-1 சைதாப்பேட்டை முதல் நிலைக்காவலர் திரு.P.பூரணகுமார் (மு.நி.கா.47317) ஆகியோர் நேற்று (24.07.2020) தரமணி, எம்.ஜி நகர் ராஜீவ்காந்தி தெரு பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்குள்ள ஒரு பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட மாவா புகையிலைப்பொருஙகள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேற்படி தனிப்படை போலீசார் கடைக்கு சென்று சோதனை செய்து போது அங்கு தடை செய்யப்பட்ட மாவா புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அதன் பேரில் மேற்படி பெட்டிக்கடையின் உரிமையாளர் சுரேஷ், வ/24, த/பெ.நாராயணன், எண்.3 ஏ, எம்.ஜி நகர், ராஜீவ்காந்தி தெரு, தரமணி என்பவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து 100 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் சுரேஷ் அளித்த தகவலின் பேரில் சுரேஷ்க்கு மாவா சப்ளை செய்த சுசில் என்பரை கைது செய்து விசாரணை செய்த போது அவர் தி.நகர் , சிவாஜி தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு மாவா தயாரித்து விற்பனை செய்வது தெரியவந்தது. அதன்பேரில் அடையார் காவல் துணை ஆணையாளர் அவர்களின் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் மேற்படி குடோனுக்கு சென்று சோதனை செய்த போது அங்கு பெருமளவில் மாவா பொருட்கள் மற்றும் மாவா தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதன் பேரில் குடோனில் மாவா பதுக்கி வைத்திருந்த சுசில், வ/34, த/பெ.சேத்தன்தாகி, எண்.15/3, வி.டி.சி செல்வா பவன், சிவாஜி தெரு, தி.நகர் என்பவரையும் கைது செய்தனர். அவரிடமிருந்து 50 கிலோ சீவல் பாக்குகள், 65 கிலேதா ஜர்தா, 5 கிலோ சுண்ணாம்பு, 5 கிலோ மாவா, 3 கிரைண்டர்கள், 1 மிக்ஸி, ரூ.2, 92, 000/- மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களையும் தனிப்படை போலீசார் ஜெ-13 தரமணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    ஜெ-13 தரமணி போலீசார் மேற்படி சுரேஷ் மற்றும் சுசில் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
    பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை வாகனத்தில் எடுத்து வந்த நபர்கள் மற்றும் விற்பனை செய்த நபர்களை கைது செய்த M-5 எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.C.புகழேந்தி, உதவி ஆய்வாளர் திரு.J.கணேஷ், M-8 சாத்தங்காடு உதவி ஆய்வாளர் திரு.S.நந்தகுமார் உதவி ஆய்வாளர் திரு.G.கருணாகரன், ஆயுதப்படை காவலர்கள் திரு.P.மாரிமுத்து (கா.எண்.51715) திரு.A.அப்துல்பாஸித் (கா.எண்.52209), J-10 செம்மஞ்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.E.ராமசுந்தரம், J-9 துரைப்பாக்கம் தலைமைக்காவலர் திரு.S.சங்கர் (தா.க.32301) J-9 துரைப்பாக்கம் முதல் நிலைக்காவலர் திரு.M.சண்முகம் (மு.நி.கா.32729), J-1 சைதாப்பேட்டை முதல் நிலைக்காவலர் திரு.P.பூரணகுமார் (மு.நி.கா.47317) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் இன்று (25.7.2020) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Check Also

SonyLIV’s next original, an edgy crime thriller, inspired by true events, will stream starting 10th July

In India, wedding celebrations have been reduced to a show of wealth & power and …