Wednesday , July 8 2020

திண்டுக்கல்லில் மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கொரோனா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மின் கட்டணத்தை அதிகம் வசூலிப்பதையும் , மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய கோரியும் திண்டுக்கல் மாலைப்பட்டி ரோட்டில் உள்ள மின் கட்டனம் வசூல் செய்யும் அலுவலகத்தின் முன்பு திண்டுக்கல்லில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.உமர்அலி தலைமை தாங்கினார். இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட தலைவர் எம்.முகம்மதுபாசித் , மாவட்ட துணை செயலாளர் பி.சேக் , மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கொரோனா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மின் கட்டணத்தை அதிகம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டுமெனவும் , மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு கோரி வைத்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட பொருளாளர் ஏ.அன்சாரி , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகிம்பாய் , நகர தொழிற்சங்க தலைவர் முஜிப்ரஹ்மான் , நகர தொழிற்சங்க செயலாளர் அங்கிஸ் உட்பட அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Check Also

அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.

சென்னை அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார். கொரோனா தொற்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *