Wednesday , June 20 2018
Home / District-News / ராயல் சக்தி அறக்கட்டளையின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

ராயல் சக்தி அறக்கட்டளையின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.


ராயல் சக்தி அறக்கட்டளை வழங்கும “மனிதம் சிறப்பு செய் ” நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழ

கோவை பீளமேடு  ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  ராயல் சக்தி அறக்கட்டளை வழங்கிய “மனிதம் சிறப்பு செய்” என்ற நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினராக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் அறிவியல்  ஆலோசகர்   பொன்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ராயல் சக்தி அறக்கட்டளை  நிறுவனத் தலைவர் சக்தி, அப்துல்கலாம்  ஆலோசகர் பொன்ராஜ் கலந்து கொண்டு  நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவிற்கு நிர்வாகிகள், நடிகர், நடிகைகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து  செய்தியாளர்களை சந்தித்து அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்  பேசுகையில்

உயர்கல்வி துறையில் நடைபெறும் ஊழல்களை தடுக்க தமிழகத்தில் உள்ள பலகலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சங்கங்களை அமைக்க வேண்டும் எனவும் அரசு செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மாணவர் சங்கங்கள் அமைக்க முயற்சிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை போல் நீர் நிலம் காற்று போன்றவற்றை மாசுபடுத்தும் 189 ஆலைகள் இயங்கி வருவதாகவும் அதுபோன்றஆலைகளில் தமிழக அரசு முழுவதும் மாசு கட்டுபாடு என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் அல்லது அவற்றை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார்.

மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை மத்திய அரசு டெல்டா பகுதிகளில் எடுப்பதை விடுத்து  ஆழ்கடலில் எடுக்க முற்பட வேண்டும் என்றும் ஆழ்கடலில் எடுத்தாலே வருகிற 20 ஆண்டு தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் ஆலோசணை வழங்கினார்.

மாணவிகளை தவறான பாதையில் வழினடத்த முயன்ற பேராசிரியர் நிர்மலா தேவி குறித்த கேள்விக்கு பதிலளித்த பொன்ராஜ், உயர்கல்வி துறை லஞ்சத்தால் பாழ் பட்டு கிடப்பது என்பதன் வெளிப்பாடுதான் நிர்மலா தேவி என்றும் அவர் ஓர் அம்பு மட்டுமே ஆனால் எய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் தமிழக ஆளுநர் மதுரை காமராஜர் பலகலைக்கழக விவகாரத்தில் தலையிட அதிகாரம்  கிடையாது என்றும் ஆனாலும் தமிழக அரசு இதற்கு ஒத்துழைத்து போகிறது என்றும் குறை கூறியதுடன் தமிழகத்தில் உயர்கல்வி துறையில் நிலவும் ஊழலை ஒழிக்க  பல்கலைகழகம் மற்றும்  கல்லூரிகளில்  மாணவர் சங்க தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அரசே கலூரிகளில் மாணவர் சங்கங்களை துவங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தானே நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து மாணவர் சங்க தேர்தல் நடத்த முயற்சிப்பேன் என்றும் தெரிவித்தார்.

பாஜக வை சேர்ந்த எஸ். வீ. சேகரின் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் ஊடகத்தை தவறாக சித்தரிப்பது நம்மை நாமே தவறாக சித்தரிப்பதற்கு அர்த்தம் என்றும்  பொது வாழ்வில் இருக்கும் நபர்கள் இப்படி செய்து விட்டு மன்னிப்பு கேட்பது என்பதை ஏற்க முடியாது என்றும் முறிப்பிட்டார்.

இதேபோல் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழக்த்தில் பாஜக வை வளர்ப்பதற்கு செயல்படுகிறாரா அல்லது ஒழிப்பதற்கு செயல்படுகிறாரா என தெரியவில்லை என்றும் எச்.ராஜா கருத்துக்கள் பாஜக விற்கு தமிழகத்தில் உலை வைக்கும் செயல் என்றும் சுட்டிக்காட்டினார்.

கோவைலிருந்து செய்தியாளர்

என். ருக்மணி [email protected]

About Admin

Check Also

6 lakh trucks will not run in TN, Truck strike from June 18

Rising diesel price, third party premium and toll charges are a few important issues on …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *