Wednesday , July 17 2019
Home / District-News / முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை துவக்க விழா.

முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை துவக்க விழா.கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மண்டபத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை துவக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவில் ஓய்வு பெற்ற கூடுதல் டி.எஸ்.பி. கோபால்சாமி வரவேற்றார். டாக்டர் சுசீலா நாச்சிமுத்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

ஓய்வு பெற்ற சி.பி.ஐ. முன்னாள் டி.எஸ்.பி. வெள்ளியங்கிரி தலைமை உரையாற்றினார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா வாழ்த்துரை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், உலகிலேயே மிகச்சிறந்த போலீசாக ஸ்கார்ட்லாந்து போலீஸ் உள்ளது. அவர்களுக்கு இணையாக தமிழக காவல்துறை விளங்குகிறது. இந்தியாவிலேயே சிறந்த காவல்நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டது.

பணித்திறன் போட்டிகளில் தமிழக காவல்துறை அதிக பதக்கங்களை வென்று வருகிறது. இங்கு 800 பேருக்கு ஒரு போலீஸ் என்ற அடிப்படையில் உள்ளனர்.

குற்றங்களை தடுத்தல், குற்றம் நடந்து விட்டால் அதனை கண்டுபிடித்தல், சட்டம், ஒழ்ஙுகு ஆகியவற்றை பாதுகாப்பதே காவல்துறையின் கடமை. நடிகர் சிவக்குமாரின் புதல்வர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் போலீசாக படங்களில் நடித்ததன் மூலம் காவல்துறையின் குடும்பத்தில் ஒரு அங்கமாக உள்ளனர் என்றார்.

இதையடுத்து நடிகர் கார்த்தி பேசுகையில், எனது ஹீரோ போலீஸ் தான். தீரன் படத்தில் நேர்மையான காவல் அதிகாரியாக நடித்திருந்தேன். நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடிப்பதே கஷ்டமாக இருக்கிறது எனறால், நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பது எவ்வளவு கடினம் என உணர்ந்தேன். இரவு, பகல் பாராமல் உழைக்கிறார்கள். போலீசாரின் குடும்பங்களில் உள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. ஜீப்பிலேயே சாப்பிடுகிறார்கள். காவல்துறையில் நேர்மையாக உள்ளவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது இல்லை. தமிழகத்தில் காவலர்கள் மிகுந்த அழுத்ததுடன் பணி செய்வதால் தான் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன.

காவலர்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.காவல்கள் தற்கொலை செய்யும் சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. பணியில் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்கள் பாதிப்பில் உள்ளதை பார்க்கும் போது அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதால் தான் அறக்கட்டளை தொடங்க வேண்டும் என்று தோன்றியது. நேர்மையாக உழைத்ததற்கு இந்த சமூகம் என்ன செய்தது என்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தோன்றி விடக்கூடாது. நேர்மையான அதிகாரிகள் இருப்பதற்கு, இதுபோன்ற அறக்கட்டளை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த வேண்டும்.

இந்த அறக்கட்டளைக்காக எங்கள் குடும்பம் சார்பில் ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கப்படுகிறது. என்றார்.

தொடர்ந்து அறக்கட்டளையை தொடங்கி வைத்து, நடிகர் சிவக்குமார் பேசியதாவது, அளவு கடந்து சொத்து சேர்த்தால், குடும்பத்துடனும், சமூகத்துடனும் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் எதுவும் நிலைக்காது என 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் புலவர்கள் பலர் கூறியுள்ளனர்.

எவ்வளவு சொத்து சேர்த்தலாலும், பசி, பினி, தூக்கம், காதல் போன்றவை அனைவருக்கும் ஒன்றே. நாட்டை காப்பாற்றும் ராணுவ வீரர்கள் ஓய்வு பெற்றவுடன் வீட்டை காப்பாற்றும் செக்யூரிட்டியாக இருப்பது அவலம். என்று வீட்டில் உள்ளவர்கள் நிம்மதியாக இருந்தால் தான் அதிகாரிகள் நேர்மையாகவும், சிறப்பாகவும் பணியாற்ற முடியும் என்றார்.

முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை நடிகர்கள் சிவக்குமார், நடிகர் கார்த்தி ஆகியோர் வழங்கினர்.

இவ்விழாவில் நடிகர் கார்த்திக்கு, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் சார்பில் சிறந்த சமுதாய காவல் விருதை, ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வழங்கினார். முடிவில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.சுந்தரம் நன்றி கூறினார்.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி expressnewsruki@gmail.com

About Admin

Check Also

Bharatanatyam Performance by Augrima Ghosh & Shipra

Chennai, July 09, 2019: A centuries-old dance form that originated from Tamil Nadu, Bharatanatyam is …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.