வெள்ள அபாயம் குறித்து தகவல் அளிக்க அழைக்க வேண்டிய எண்கள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்டார்.

சென்னை எழிலக வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில்
வட கிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தயார் நிலை குறித்த தொகுப்பேடு மற்றும் வெள்ள அபாயம் குறித்து தகவல் அளிக்க அழைக்க வேண்டிய எண்கள் அடங்கிய தொலைபேசி கையேடு ஆகியவற்றை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்டார்.
அக்டோபர் 28 முதல் வடகிழக்குப் பருவமழை துவங்கிய நிலையில் நவ.16 வரை 180.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது எனவும் இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 287.9 மி.மீ எனவும் இது இயல்பை விட 37% குறைவு எனவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த கால தரவுகளின் அடிப்படையில், 4133 பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்புள்ளாகும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது எனக்கூறிய அவர், அதில் 321 இடங்கள் மிகவும் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் எனவும், 797 இடங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் எனவும், 1096 இடங்கள் மிதமான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் எனவும், 1919 இடங்கள் குறைவான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் எனவும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.
சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இயல்பான அளவும் 31 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான அளவும் மழை பெய்துள்ளது எனவும் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் விரிவான ஆலோசனைக் கூட்டமும், முதலமைச்சர் அறிவுரைப்படி தலைமை செயலாளர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுள்ளது எனவும் தெரிவித்தார்.
வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 4, 713 தங்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன எனவும் 
பாம்பு பிடி வீரர்கள், நீச்சல் வீரர்களும் உட்பட பேரிடர் காலங்களில் உடனடியாக செயலாற்றிட 43, 409 (14, 232 பேர் பெண்கள்) முதல் நிலை மீட்பாளர்கள் தயாராக உள்ளனர் எனவும் கூடுதலாக கால்நடைகளை பாதுகாக்க கூடுதலாக 8, 871 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர் எனவும் கூறிய அவர், பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களை நிர்வகிக்கவும் 662 பல்துறை மண்டல குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 5, 505 காவலர்களும் ஊர்காவல் படையினைச் சேர்ந்த 691 நபர்களுக்கும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையால் பயிற்சி அளிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பல்வேறு வகையில் பாடத்தை அளித்துள்ளது எனக்கூறிய அவர், அதனடிப்படையில் இந்த வருடம் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். மேலும், வடகிழக்குப் பருவமழை காலத்தில் நீரை வெளியேற்ற கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
செம்பரம்பாக்கம் ஏரி குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்ற அவர், நீர் முழுக் கொள்ளளவை எட்டும் பட்சத்தில் உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை தயார் நிலையில் உள்ளது எனவும் செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் பொதுப்பணித்துறையின் முழுக் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
வெள்ளம் தேங்கும் பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், அரசு நடவடிக்கைகளை தாண்டி மக்களின் ஒத்துழைப்பும் அவசியமான ஒன்று என்பதால் அதை மனதில் வைத்து பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
 36 மாவட்டங்களுக்கும் மற்றும் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள் வழங்க மூத்த இந்திய ஆட்சிப் பணியாளர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், அவசர காலங்களில் தகவல் தொடர்புக்காக மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1070) மற்றும் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1077) TNSMART செயலி, சமூக வலைதளம் மற்றும் பத்திரிக்கை ஊடகத்துறை மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

About admin

Check Also

Marine Bio Donates High-End Protective Masks to Rajiv Gandhi Government General Hospital

Marine Bio Co. Ltd., a South Korean firm with the support of the Korean Trade-Investment Promotion …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *