Wednesday , October 16 2019

 

கோவை இதயதெய்வ மாளிகை வாளகத்தில் மாநகர், புறநகர் மாவட்ட செயலாளர்கள் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ். பி வேலுமணி பேசுகையில் ஒற்றுமையாக செயல்பட்டால் எளிதாக வெற்றி பெறலாம். நாம்
அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, தீவிர உறுப்பினர் சேர்க்கையின் ஈடுபட வேண்டும். இதற்காக நகரம், பேரூராட்சி, ஊராட்சி, கிளை, வார்டு வாரியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. நமக்குள் சிறு, சிறு பிரச்சினைகள் இருக்கதான் செய்யும் அதை எல்லாம் மறைந்து ஒரு தாய் பிள்ளைகள் போல நாம் அனைவரும் செயல்பட வேண்டும். எந்த கொம்பன் வந்தாலும் அதிமுக விற்கு வீழ்ச்சி கிடையாது. கோவை மாவட்டம் ஜெயலலிதாவுடைய கோட்டை என்று கூறினார்.

அ.இ.தி.மு ஆலோசனை கூட்டம் மறைந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடுவது மற்றும் அதிமுக வில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், புதுப்பித்தல் தொடர்பாக கோவை மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை கட்சி நிர்வாகிகளிடம் அமைச்சர் எஸ். பி.வேலுமணி வழங்கினார்.

உடன் எம்.ஏல்.ஏ.க்கள் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர். ஜி அருண்குமார் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ச்சுணன், எட்டிமடை ஏ.சண்முகம், வால்பாறை கஸ்தூரி வாசு, ஓ.கே.சின்னராஜ், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, முன்னாள் அமைச்சர் செ.மா.வேலுச்சாமி, மலரவன் மற்றும் பலர் கலந்து கொண்டு புதிய விண்ணப்பங்களை வாங்கினார்.

About Admin

Check Also

Watson’s the Grub Pub Chennai to host a Plogging party on 5th October 2019

Chennai’s favourite neighbourhood grub pub – Watson’s – will be hosting a plogging drive on …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.