Monday , September 24 2018

கோவை, ஜனவரி 23  செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கான வாடிவாசல் க்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  அடிக்கல் நாட்டினார்.
கோவையில் முதன்முறையாக வரும் 28-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற இருக்கின்றது.
ஜல்லிக்கட்டு அடிக்கல் நாட்டு விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன், எம்எல்ஏக்கள்  அம்மன் கே.அர்ச்சுணன் , எட்டிமடை ஏ.சண்முகம்,  மாவட்ட சூப்பிரண்டு மூர்த்தி,  ஊரக வளர்ச்சி துறை சங்கர்ராஜா, வக்கீல் விமல் சோமு மற்றும் கழக நிர்வாகிகள்,   உள்பட பலர் கலந்து  கொண்டனர்.
போட்டி ஏற்பாடு குறித்து  ஓம்கார் அறக்கட்டளை நிர்வாக சுப்பிரமணியம் கூறியதாவது
கோவையில் ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக நடத்த தனியாருக்கு சொந்தமான
சுமார் 25 ஏக்கர் பரப்பளவில்  இடம் தயாராகி வருகின்றது. போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து  தற்போது வரை 750 காளை மாடுகளும் , 550 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து  அமைச்சர் எஸ். பி.வேலுமணி. கூறுகையில், “தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மதுரையில் வாடிவாசல் திறந்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
கடந்தாண்டு அனைத்து மாவட்டத்திலும் இளைஞர்கள் பாரம்பரிய விளையாட்டுக்காக குரல் கொடுத்தனர். அதன் விளைவாகவே ஜல்லிக்கட்டு நடந்தது.
கோவையில் கடந்தாண்டே  ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கோரிக்கை எழுந்தது.
இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க தற்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் ஓம்கார் அமைப்பும் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது” என்றார்.

About Admin

Check Also

கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி பயிலரங்கம், கமல்ஹாசன் பங்கேற்பு

  கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு கோவை சுங்க கார்னர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.