‘ராசராசன் கண்ட பெருவுடையார் கோயில்” என்னும் இசைத்தட்டு வெளியீட்டு விழா

தமிழ் மாமன்னன் ராசராசன் பிறந்த ஐப்பசி சதயத் திருநாள் 27. 10. 2020 செவ்வாய்க்கிழமை அந்த பிறந்தநாளை போற்றும் வண்ணம் 25. 10  2020 ஞாயிற்றுக்கிழமை ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில் ‘ராசராசன் கண்ட பெருவுடையார் கோயில்” என்னும் இசைத்தட்டு வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராசராசன் கண்ட பெருவுடையார் கோவில் என்னும் கவிதையை டாக்டர்.சிவக்குமார் ஐ.பி.எஸ். எழுதியிருந்தார் . அதனை சென்னையைச் சேர்ந்த பாமரன் என்ற இசையமைப்பாளர் பாடலாக மாற்றி இருந்தார். இப்பாடலை சீர்காழி சிவசிதம்பரம், பாடகி அனுராதா ஸ்ரீராம் பாடி இருந்தார்கள்.

இந்த இசைத்தட்டு வெளியீட்டு விழா திண்டல் வேளாளன் கல்லூரியில் நடைபெற்றது.ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர். ஸ்டாலின் குணசேகரன் இசைத்தட்டு வெளியிட, வேளாளர் கல்லூரி தாளாளர் சந்திரசேகரும் செங்குந்தர் கல்விக் குழும தலைவர் எஸ். சிவானந்தன் பெற்றுக்கொண்டனர்.கவிதை எழுதிய விதம் குறித்தும் படமாக்கிய விதம் குறித்தும் டாக்டர்.R. சிவகுமார் பேசினார்.

இந்த நிகழ்வில் சேலம் மாவட்ட கல்வி அலுவலர் திரு. M.A. உதயகுமார் அவர்களும், ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் தலைவர் மக்கள். ஜி. ராஜன் அவர்களும், தஞ்சாவூர் சசி. எம். குமார் அவர்களும், ஈரோட்டை சேர்ந்த கவிஞர் இடக்கரத்தான் போட்டோ பாயிண்ட் கந்தவேல், செல்வா சேரி டேபிள் டிரஸ்ட் தலைவர். ஜெ.ஜெ.பாரதி, ஈரோடு மாவட்ட காவல் அலுவலக செந்தில்குமார் கலந்து கொண்டனர்.

About admin

Check Also

குமரி மாவட்டத்தின் முதல் பெண் ஐ பி எஸ்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆற்றூர் மங்களநடையை சேர்ந்த பிறேமசந்திரன் ஓய்வுபெற்ற சிறப்பு உதவியாளர் இவரது மனைவி ரெஜினாள் இவரது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *