Tuesday , January 21 2020

15.08.2017-ந் தேதி திரு. சங்கரசுப்பு துணை செயலாளர், தமிழ்நாடு பொது தேர்வாணயம், சென்னை-03 என்பவர் தனது புகாரில் 18.07.2017-ம் தேதி சுமார் 03.00 மணியளவில் தனியார் தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒளிப்பரப்பானதாகவும், அதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தால் நடத்தப்பட்ட Group-1 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், சில போலியான ஆவணங்களை உண்மையான ஆவணங்கள் போல் சித்தரித்து TNPSC புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திகள் ஒளிபரப்பப்பட்டதாகவும், இதனால் மேற்படி தொலைக்காட்சியின் ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரிய புகார் மனுவுடன் மேற்படி தனியார் தொலைக்காட்சியின் பொது மேலாளரிடமிருந்து பெற்ற பிரச்சனைக்குரிய Answer Script-யின் நகலினையும் மற்றும் DVD -யையும் அனுப்பியுள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கும்படி கொடுத்த புகாரின் மீது CCB யில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கை விசாரணை செய்ததில் TNPSC -யில் ஒழுங்கு நடவடிக்கை துறையில் SO ஆக இருந்த சிவசங்கர் என்பவர் 74 காலியிடங்களுக்கான 29/07/2016, 30/07/2016, மற்றும் 31/07/2016 ஆகிய தேதிகளில் நடைபெற்ற Group-1 பிரதான தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான விடைத்தாள்களை மாற்றி இணைப்பதாக கூறி பணம் மற்றும் நகைகளை Candidate ராம்குமார் என்பவரிடம் வாங்கிக்கொணடு குற்றம் புரிந்துள்ளார் என்று தெரிய வந்ததால் அவரை 24.11.2017-ம் தேதி கைது செய்து தற்போது நீதி மன்ற காவலில் இருந்து வருகிறார். சிவசங்கரை தொடர்ந்து Group-1 தேர்வு எழுதிய Candidate ராம்குமார் மற்றும் அவருக்கு துணைபுரிந்த குமரேசன் ஆகியோர்களின் வாக்குமூலத்தை வைத்து ரியல் எஸ்டேட் பிரமுகரான பால்ராஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் விசாரணையில் பால்ராஜ் ஏற்கெனவே மத்திய குற்றப்பிரிவில் நில மோசடி வழக்கிலும், வேலைவாய்ப்பு மோசடி பிரிவு வழக்கிலும் சம்மந்தப்ட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் பால்ராஜை விசாரணை செய்ததில் Group-1 தேர்வில் தேர்ச்சி பெறவைத்து விடுவதாக கூறி Candidate ராம்குமாரிடம் பணம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. பின்னர் விசாரணையிலிருந்து TNPSC -ல் உதவி பிரிவு அலுவலர் (ASO) ஆக பணிபரியும் பெருமாள் என்பவர் 22.12.2017-ம் தேதி மாலை கைது செய்யப்பட்டார். மேற்படி பெருமாள் என்பவரை விசாரணை செய்ததில் தான் Group-1 தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்னர் Candidate ராம்குமார் என்பவருக்கு அவர் தேர்வில் தோல்வியுற்ற விவரத்தை தெரிவித்து மேற்படி ராம்குமாருக்கு தேர்வு முறைகளை ரத்து செய்து வழக்கு தொடர எழுதப்படாத Group-1 விடைதாளை யாருக்கும் தெரியாமல் எடுத்து கொடுத்து ராம்குமாரிடம் பணம் பெற்றுள்ளதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். பின் எதிரியை சென்னை பெருநகர முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், அல்லிக்குளம் அவர்கள் முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

விசாரணை அதிகாரி –
திரு.செங்குட்டுவன், காவல் ஆய்வாளர்,
27வது அணி, மத்திய குற்றப்பிரிவு
செல் எண். 98408 23290.

About Admin

Check Also

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

குற்றவாளிகளை பிடித்த காவல் ஆளிநர்கள் மற்றும் குற்றவாளிகளை துரத்தி சென்று பிடிக்க முயன்ற நபரை (பொதுமக்கள்) சென்னை பெருநகர காவல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.