Sunday , July 21 2019

பிரிமியர் நிறுவனத்தின் பெயரில் போலியான வீட்டு உபயோகப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்த நபர் கைது. ரூ.7.7 லட்சம் மதிப்புள்ள 522 வீட்டு உபயோக பொருட்கள் பறிமுதல்.

சிவனேசன் அண்டு கம்பெனி (பிரிமியர்) நிறுவனத்தின் மார்க்கெட்டிங் உதவி மேலாளர் திரு.பாலாஜி வ/26, த/பெ.எத்திராஜ் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில் தங்களது தயாரிப்பு நிறுவனத்தின் வியாபார பெயரான பிரிமியர் என்ற பெயரில் போலியான வீட்டு உபயோகப் பொருட்களை தயாரித்து சென்னை பார்க்டவுன் பகுதியில் உள்ள வணிக நிறுவனத்தில் விற்பனை செய்து வருவதாகவும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார். மேற்படி புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மத்திய குற்றப்பிரிவு திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

மத்தியகுற்றப்பிரிவு திருட்டு வீடியோ தடுப்புப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று (26.10.2017) ராசப்பா செட்டி தெருவில் உள்ள ஜே.பி மார்கெட்டிங் நிறுவனத்தில் திடீர் சோதனை செய்த போது அங்கு பெருமளவில் பிரிமியர் நிறுவனத்தின் பெயரில் போலியான வீட்டு உபயோகப்பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அதன்பேரில் பிரிமியர் நிறுவனத்தின் பெயரில் போலியான வீட்டு உபயோகப்பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்த மேற்படி ஜே.பி மார்கெட்டிங் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.தேஜ்சிங், ஆ/வ.37, த/பெ. விஜய்சிங் ராசப்பா செட்டி தெரு, பிராட்வே, என்பவரை கைது செய்தனர். மேலும் மேற்படி கடையிலிருந்து பிரிமியர் பெயரில் போலியாக தயாரித்து வைத்திருந்த வீட்டு உபயோகப்பொருட்களான பிரஸ்சர் குக்கர், இண்டக்ஸன் ஸ்டவ், தவா, மிக்ஸி மற்றும் எலக்ட்ரிக்கல் ரைஸ் குக்கர் உட்பட மொத்தம் 522 வீட்டு உபயோகப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட வீட்டு உபயோக பொருட்களின் மதிப்பு ரூ. 7.7 லட்சம் ஆகும்.
கைது செய்யப்பட்ட தேஜ்சிங் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா

சென்னை போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி ஜி3 கீழ்பாக்கம் போக்குவரத்து சாரகத்தில் பொதுமக்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.