Thursday , November 14 2019
Home / EDUCATION / 14-வது பட்டமளிப்பு விழா கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் 552 பேருக்கு பட்டம்

14-வது பட்டமளிப்பு விழா கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் 552 பேருக்கு பட்டம்

கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியின் 14-வது பட்ட மளிப்பு விழா நடைபெற்றது. இதில் 2013-16ம் ஆண்டில் படித்து முடித்த 552 பட்டதாரி மாணவ-மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதற்கான விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு ரத்தினம் கல்விக்குழுமங்களின் தலைவர் முனைவர் மதன் ஆ.செந்தில் தலைமை வகித்தார். விழாவிற்கு வந்த அனைவரையும் முதன்மை கல்வி நிர்வாகி அதிகாரி மாணிக்கம், மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.முரளிதரன் ஆகியோர் வரவேற்றார்.
இதில் சிடிஎஸ் நிறுவனத்தின் அசோசியேட் இயக்குனர் (திட்டம்),எம்.வி.வெங்கடேசன், லீபரா நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு தலைமை அதிகாரி சந்திரசேகர் சென்னியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினர். இதில் வெங்கடேசன் பேசியதாவது, இந்த விழாவில் நான் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பட்ட படிப்பு நமக்கு ஒரு அங்கீகாரம் போன்றது. அங்கீகாரம் கையில் இருக்கும் போது இயல்பாகவே தைரியம் வந்து விடும். எதையும் தைரியமாக நாம் சந்திக்க தயாராக வேண்டும்.

நீங்கள் சொந்த தொழில் செய்தாலோ, அல்லது அரசு, மற்றும் தனியார் துறையில் பணிபுரிவதாக இருந்தாலோ, உங்களுக்கென்று தனித்தன்மையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். தொழில் முனைவோருக்கென்று கோவையில் தனியாக தொழில் மையம் உள்ளது. உங்களின் எண்ணங்களில் தோன்றும் தொழிலை நீங்கள் தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு தொழில் மையம் உதவ காத்திருக்கிறது. அதற்கான திட்ட வரையரைகளையும், பொருளாதார பட்டியலையும் நீங்கள் தெளிவாக குறிப்பிட வேண்டும். தேசிய அளவில் உங்கள் கல்வி நிறுவனம் 66-வது இடத்தில் உள்ளதை எண்ணி நீங்கள் பெருமை பட வேண்டும். இதற்கெல்லாம் காரணம் ரத்தினம் கல்வி குழுமத்தின் தலைவர் மதன் செந்தில் போன்றவர்கள் தான். உங்கள் லட்சியத்தை நோக்கி அடி எடுத்து வையுங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் தலைமை உரையாற்றிய மதன் செந்தில் பேசும் போது, இங்கே பட்டம்; பெற்ற அனைவரையும் பாராட்டுகிறேன். பட்டம் பெற்றதுடன் நமது கல்லூரி வாழ்க்கை முடிந்து விட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பாக நீங்கள் எந்த நாளும் நமது கல்வி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்திய அளவில் கல்விதரத்தில் நாம் 66-வது இடத்தை பெற்று உள்ளோம். உங்களது கல்விக்கொண்டு வாழ்க்கைத்தரத்தை நீங்கள் நல்ல படியாக அமைத்துக்கொள்ள வேண்டும். நாட்டுக்கும், இந்த நிறுவனத்திற்கும், உங்களது பெற்றோருக்கும் நீங்கள் பெருமை தேடி தர வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார். விழாவில் இளங்கலைத் துறையைச் சேர்ந்த ஆங்கிலம், கணினித்துறை, ஆடைவடிவமைப்பு, தகவல் தொழில் நுட்பம், கணிதம், காட்சி தொடர்பியல், வணிகவியல், மாணவ-மாணவிகள் 425 பேரும், முதுகலை நிலையைச் சேர்ந்த முதுகலை மேலாண்மை, கணினி அறிவியல், தகவல் தொடர்பியல், வணிகவியல், காட்சித் தொடர்பியல் ஆகிய துறைகளை சேர்ந்த 127 பேரும் பட்டம் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த துறையைச்சேர்ந்த ஆசிரியர்கள், கல்லூரி ஊழியர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

About Admin

Check Also

WORKSHOP ON ‘ROLE OF STUDENTS IN DEVELOPING ROCKETS & SATELLITES HELD @ VELAMMAL’

Velammal Main school, Mugappair Campus, hosted a workshop on ‘Role of students in developing Rockets …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.