A journey towards love and humanity

ஈராக் நாட்டில் உள்ள கர்பலா என்ற இடத்தில் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்} அவர்களின் பேரர் இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் ஸியாரம் இருக்கிறது அங்கு ஆண்டு தோறும் ஸஃபர் மாதம் 20ஆம் தேதி உலகம் முழுதும் இருந்தும் சியா முஸ்லிம்கள் வருகை தந்து சியாரத் செய்யும் நாளாக இருக்கிறது.

இந்த நாளில் சுமார் 3 கோடி மக்கள் இங்கு கூடுவதாக அரசாங்கத்தால் கணக்கிடப்படுகிறது. ஆனால் உள்ளூர் மக்களையும் சேர்த்து கணக்கிட்டால் இது ஐந்து கோடியை தாண்டும் என்று உள்ளூர் வாசிகள் கூறுகிறார்கள்.

ஐந்து கோடி மக்களுக்கு இருப்பிடம் உணவு குடிநீர் என அனைத்து அடிப்படை வசதிகளையும் இங்கு உள்ள மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தன்னுடைய சொந்தப் பணத்தில் அரசை எதிர்பார்க்காமல் செலவு செய்து கொண்டிருக்கின்றனர்.

அரசுதான் செய்ய வேண்டும் என்று கருதாமல் இமாம் ஹூஸைனை தரிசிக்க வருகிற யாத்திரிகர்கள் தன் சொந்த உறவினர்களை போலவும் தனது சொந்த நிகழ்ச்சிக்கு வருவதைப் போலவும் எண்ணி பல கோடி ரூபாய் செலவு செய்து இங்கு வருகின்ற இஸ்லாமியர்களை வரவேற்பது உபசரிப்பது தங்குவதற்கு ஏற்பாடு செய்வது என்று பல்வேறு நிகழ்வுகளை இருக்கக்கூடிய பெருமக்கள் செய்து வருகிறார்கள் இவர்களுக்கு உற்ற துணையாக அண்டை நாடான ஈரானிலிருந்து மருத்துவ குழுக்கள் சுகாதார குழுக்கள், இடத்தை சுத்தம் செய்யக்கூடிய பணியாளர்கள் என அனைத்து உதவிகளையும் ஈரானிலிருந்து வருகை தரும்ட சகோதரர்கள் செய்து கொண்டிருப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இது உலகத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள இடமாக காணப்படுகிறது. இங்கு வரும் இஸ்லாமியர்கள் தமது புனித கடமையை நிறைவேற்றி இமாம் ஹூஸைனை ஸியாரத் செய்து பல் வேறு இடங்களுக்கும் சென்று அங்குள்ள இறைநேசர்களையும் தரிசிக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இஸ்லாத்தின் இறுதிக் கடமையாகிய புனித ஹஜ் கடமைக்கு ஆண்டுக்கு 25 லட்சம் இஸ்லாமியர்களை தவிர அங்கு வேறு யாருக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை.

ஆனால் ஆண்டுக்கு மூன்று கோடி மக்களுக்கும் மேல் கூடுகிற இடமாக சந்திக்கும் இடமாக நபிகள் நாயகம் (அல்) அவர்களின் பேரர் இமாம் ஹூஸைன் அவர்களின் இந்த ஸியாரத் இடம் பெறுகிறது இங்கு கூடும் அனைத்து மக்களுக்கும் தேவையான இம்மக்களே வழங்குவது என்பது கேட்பதற்கே வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

உண்மையில் நாம் எங்கு திரும்பினாலும் மனித நேயத்தையும், மக்கள் கடல் போல் திரண்டிருப்பதையும் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருப்பதை ஈராக்கில் கர்பலாவிலேயே காணமுடியும் இதுவே உலகில் அதிக மக்கள் கூடும் இடம் என்று சொன்னாலும் அது மிகையாகாது.

About admin

Check Also

Celebrities Swathi, Madhumitha and Sripriya cook up a culinary treat in this week’s episode of COLORS Kitchen

Chennai, 19th November 2020: COLORS Tamil viewers are in for a treat as this weekend’s episodes …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *