ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர்கள் பதவியேற்பு

சென்னை வாழ் விஸ்வகர்மர்களுக்கு பாத்தியப்பட்ட பாரிமுனை, தம்பு செட்டி தெருவில் அமைந்துள்ள சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர்கள் பதவியேற்பு 01.10.2020 காலை தக்கார் சி. லெட்சுமணன் அவர்கள் முன்னிலையில் சி.எஸ்.62/1933-ன் வரைவு திட்டத்தின்படி நடைபெற்றது. பிரம்மஸ்ரீ. சர்வேஸ்வரன் ஆச்சாரியார், பிரம்மஸ்ரீ. யுவராஜ் ஆச்சாரியார், பிரம்மஸ்ரீ. மோகன் ஆச்சாரியார், பிரம்மஸ்ரீ. ரமேஷ் ஆச்சாரியார், பிரம்மஸ்ரீ. சுப்பிரமணி ஆச்சாரியார் ஆகிய ஐவரும் ஆலய அறங்காவலர்களாக பதவியேற்று கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து பிரம்மஸ்ரீ. சர்வேஸ்வரன் ஆச்சாரியார் அவர்கள் அறங்காவலர் குழு தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் அகில பாரத விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சிவராஜ ஞானாச்சார்ய குருசுவாமிகள் பங்கேற்று அறங்காவலர்களை பாராட்டி ஆசீர்வதித்தார். மேலும் சென்னை வாழ் விஸ்வகர்ம சேவார்த்திகளும் மற்றும் கம்மாளர் குலப்புகழ் வளர்க்கும் பெரியோர்களும் பதவியேற்று கொண்ட அறங்காவலர்களை வாழ்த்தினார்.

About admin

Check Also

CHOLAYIL PRIVATE LTD GIVES BACK TO MOTHER NATURE!

Chennai, October, 2020: Cholayil Private Limited plants more than 15,000 saplings in their R & D …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *