இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் அவர்களுக்கு நினைவஞ்சலி அறிக்கை.

தமிழக இந்துக்களின் அடையாளம் இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி ராமகோபாலன் ஜி இறைவனடி சேர்ந்தார் என்று செய்தி ஒட்டுமொத்த இந்துமுதாயத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆயிரக்கணக்கான இந்து இயக்க தொண்டர்களை உருவாக்கிய சிற்பி திரு ராமகோபாலன் . ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஆணிவேராக சுமார் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் செயல்பட்டுள்ளார். மீனாட்சிபுரம் மதமாற்றம் மண்டைக்காடு கலவரம் போன்ற இக்கட்டான காலகட்டங்களில் அமரர் ராமகோபாலன்ஜிஆற்ற்றிய மகத்தான சேவை இந்துக்களால் என்றென்றும் நினைவு கூறப்படும். போர்க்குணம் படைத்த கோபால் தீயவர்களை தேசத்துரோகிகள் படுகொலை செய்ய கடுமையாக முயன்றும் இறைவனின் பேரருளால் அவர் சுமார் 100 ஆண்டு காலம் வாழக்கூடிய பெரும் பேற்றை பெற்றிருந்தார். அவர் மீது அன்பும் மரியாதையையும் பக்தியும் கொண்ட பல ஆயிரம் இந்துமுன்னணி தொண்டர்களுக்கும் ஆர் எஸ் எஸ் ஸ்வயம் சேவகர்களுக்கும் பல்வேறு இந்து இயக்கங்களின் நிர்வாகிகள் தொண்டர்களுக்கும் இந்துக்களுக்கும் இறைவன் அவரது இழப்பை தாங்கிக் கொள்ளும் மனோ வலிமை அருள பிரார்த்திக்கிறோம்.
திரு இராம கோபாலன் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பணிந்து பிரார்த்தனை செய்கிறோம்.

About admin

Check Also

CHOLAYIL PRIVATE LTD GIVES BACK TO MOTHER NATURE!

Chennai, October, 2020: Cholayil Private Limited plants more than 15,000 saplings in their R & D …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *