சாமானிய மக்கள் முற்றிலுமாக ரயில்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும்

இந்திய ராயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக எஸ்.ஆர்.எம்.யூ பொது செயலாளர் என்.கண்ணையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்…

இரண்டு தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசிய ரயில்வே துறை அமைச்சர் இந்திய ரயில்வே தனியாமயமாக்கப்படாது என்று தெரிவித்திருந்தார். ஆனால் நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான் இந்திய ரயில்வே கட்டாயம் தனியார் மயமக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இது மக்களை ஏமாற்றும் செயலாக இருக்கிறது.

மேலும் ரிசர்வேஷன் அல்லாத பெட்டிகளை முழுவதுமாக ஏசி பெட்டிகளாக மாற்ற செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் சாமானிய மக்கள் முற்றிலுமாக ரயில்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

இதை கண்டித்து வருகிற 19 ஆம் தேதி இரவி 8 மணி முதல் 8.10 வரை ரயில்வே ஊழியர்களும், பொதுமக்களும் தங்களது இல்லங்களில் மின் விளக்குகளை அனைத்து மத்திய அரசிற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

2013 ல் விமான நிலையங்களில் தனியார் பேருந்துகள் மற்றும் விமானங்கள் செல்லும் போது ரயில்வேயில் ஏன் செய்ய கூடாது என்று பிரதமர் அவதற்கு முன்னரே சொன்னவர் மோடி

ராயில்வே நட்டத்தில் இயங்கவில்லை. Operating Ratio கணக்குப்படி ரயில்வே துறை ரூபாய் 97 செலவழித்து ரூபாய் 100 வருமானம் ஈட்டுகிறது.

இந்த நிலையில் அனைத்து பெட்டிகளும் ஏசியாக மாற்றப்பட்ட்டால் டிக்கெட் விலையும் அதிகரிக்கும்.  450 ரூபாயில் இருந்து 1400 ரூபாயாக கொள்ளையடிக்க நினைக்கிறது மத்திய அரசு. இதை இப்போதே எதிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

About admin

Check Also

CHOLAYIL PRIVATE LTD GIVES BACK TO MOTHER NATURE!

Chennai, October, 2020: Cholayil Private Limited plants more than 15,000 saplings in their R & D …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *