Friday , April 3 2020
Home / Business / ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் புதிய அங்கீகரிக்கப்பட்ட முகமையகம் (டீலர்ஷிப்) சென்னையில் தொடக்கம்

ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் புதிய அங்கீகரிக்கப்பட்ட முகமையகம் (டீலர்ஷிப்) சென்னையில் தொடக்கம்

உலகிலேயே இருசக்கரவாகனத்தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் சார்பில் சென்னை மேடவாக்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட புதிய முகமையகம் (டீலர்ஷிப்) தொடங்கப்பட்டுள்ளது.

18 ஆயிரம் சதுர அடிக்கும் அதிகமானபரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகமையகத்தை, ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் விற்பனை, சந்தை மற்றும் வாடிக்கையாளர் நலனுக்கான பிரிவின் தலைவர் அசோக்பாஷின் தொடங்கிவைத்தார்.

இந்த விழாவில் பாஷின்பேசியதாவது:

சென்னை நகரமானது எங்களுக்கு மிகவும் முக்கியமானசந்தையாக விளங்கிவருகிறது. எங்களது பலதரப்பட்ட இருசக்கரவாகனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவுதருவதால், அவற்றின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதை நாங்கள் உணர்கிறோம். எரிபொருள்சிக்கனம், சிறப்பானசெயல்பாடு, நீண்டகால உழைப்பு போன்ற தனித்தன்மைகளை அங்கீகரிக்கும் வகையில் எங்களது வாகனங்களுக்கான தேவை உயர்ந்து வருகிறது.

வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான இருந்து அவர்களின் தேவையைப்பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எங்களது தொடர் முயற்சிகளின் நடவடிக்கையை இந்தப்புதிய டீலர்ஷிப்பூர்த்தி செய்யும் என்றார்.

சென்னையின் குடியிருப்பு மற்றும் வர்த்தகப்பகுதிகளாக மேடவாக்கம் பகுதிமிகவேகமாகவளர்ந்து வருகிறது. சோழிங்கல்லூர், மடிப்பாக்கம், சேலையூர், கீழ்கட்டளை, வேளச்சேரி, தாம்பரம் போன்ற முக்கிய பகுதிகளுக்குமிக அருகிலேயே மேடவாக்கம் பகுதி இருக்கிறது. எனவே, மேடவாக்கத்தில் முகமையகத்தை (டீலர்ஷிப்) தொடங்கி இருப்பதன்மூலம், அதன்அருகிலுள்ள பகுதிகளில்வசிக்கும்வாடிக்கையாளர்களின்தேவையையும்பூர்த்தி செய்யமுடியும்.
நாடுமுழுவதும்எங்களதுஹீரோமோட்டார்நிறுவனத்தின்தயாரிப்புகளைவாடிக்கையாளர்களுக்குக்கொண்டுசெல்லும்வகையில்அங்கீகரிக்கப்பட்டமுகமையகங்கள், சேவை மற்றும்உதிரிபாகவிற்பனை ஆகியவற்றை உள்ளடக்கிய 6 ஆயிரம்மையங்கள்இயங்கிவருகின்றன.

For more information:
Please visit: www.heromotocorp.com | FB: /HeroMotoCorpIndia | Twitter: @HeroMotoCorp

Press Contact:
corporate.communication@heromotocorp.com

About Ragavendhar

Check Also

Explore California Through Movies during your Quarantine Days!

If you’re trying to answer the questions, “Which famous movies were filmed in California?” and …