Sunday , October 20 2019
Home / News / ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் புதிய ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் திறப்பு விழா

ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் புதிய ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் திறப்பு விழா

IMG_2017-03-05_21-41-26-1
கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் இரண்டு பொறியியல் கல்லூரிகள், இரண்டு கலை அறிவியல் கல்லூரிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரியினை குனியமுத்தூர் மற்றும் கோவைப்புதூரில் செயல்படுத்தி வருகிறது.

இக்குழுமங்களின் கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு கல்வித் துறையில் பல்வேறு சாதனைகள் மற்றும் விருதுகளை பல்வேறு நிறுவனங்களில் பெற்று முதன்மையாக திகழந்து வருகிறது. மேலும், கோவை மற்றும் அதன் சுற்று வட்டராங்களில் பல சமூகப் பணிகளை செய்து வருகின்றது. இந்நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி இக்கல்வி நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் புதிதாக ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி மற்றும் ஆதித்யா கலந்து கொண்டனர்.

திருக்கோவில் கும்பாபிஷேகம் மிகப் பிரமாண்ட அளவில் நடைபெற்று பக்தி கோடிகளுக்கு மற்றும் பொதுமக்கள் தங்கள் குடுபத்தினருடன் கலந்து கொண்டு பாகவான்களை தரிசித்து சென்றனர்.

About Ragavendhar

Check Also

அப்துல் காலம் நினைவு தினம்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் …