Wednesday , July 17 2019
Home / Tamilnadu Police / வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றிய போலி ஐ.எப்.எஸ் அதிகாரி கைது.

வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றிய போலி ஐ.எப்.எஸ் அதிகாரி கைது.

சென்னை, பெரியமேடு, காட்டூர் சடையப்பன் தெரு, எண்.9/4, என்ற முகவரியில் இம்ரான், வ/35, த/பெ.ஷாஜகான் என்பவர் வசித்து வருகிறார். இவர் புரசைவாக்கம் பகுதியில் ரெடிமேட் ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பாண்டிச்சேரியைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணஹரி என்பவர் அடிக்கடி துணி எடுக்க வந்துள்ளார். கோகுல கிருஷ்ணஹரி தன்னை ஒரு ஐ.எப்.எஸ் அதிகாரி என கூறி மேற்படி துணிக்கடையின் உரிமையாளர் இம்ரானிடம் அறிமுகமாகியுள்ளார். மேலும் கோகுல கிருஷ்ணஹரி தனது உறவினர்கள் வெளிநாட்டில் உயர் பதவிகளில் இருப்பதாகவும் அவர்கள் மூலம், வேலையில்லாதவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கிக்கொடுப்பதாக இம்ரானிடம் கூறியுள்ளார். இம்ரான், கோகுல கிருஷ்ணஹரி பேச்சை நம்பி தனது மைத்துனருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தரக்கோரி ரூ. 5 லட்சம் பேசி ரூ.2 லட்சத்தை கடந்த 20.12.2017 அன்று முன்பணமாக கொடுத்துள்ளார். ஆனால் பேசியபடி வேலை வாங்கி தராமலும் பணத்தை திரும்ப தராமலும் கோகுல கிருஷ்ணன் ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக இம்ரான் ஜி-1 வேப்பேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
ஜி-1 வேப்பேரி காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட கோகுலகிருஷ்ணஹரி, த/பெ.குணசேகரன், எண்.27, குமரன் நகர், 3 வது மெயின்ரோடு, லாஸ்பேட்டை, பாண்டிச்சேரி என்பவரை நேற்று (10.02.2018) கைது செய்தனர்.
விசாரணையில், கோகுலகிருஷ்ணஹரி போலி ஐ.எப்.எஸ் அதிகாரி என்பது தெரியவந்தது. மேலும், விசாரணையில் இவர் பொறியியல் பட்ட படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தன்னை ஒரு ஐ.எப்.எஸ் அதிகாரி என கூறி சுற்றி திரிந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட கோகுலகிருஷ்ணஹரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா

சென்னை போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி ஜி3 கீழ்பாக்கம் போக்குவரத்து சாரகத்தில் பொதுமக்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.