Sunday , September 22 2019
Home / Business / வாடிக்கையாளர்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க, தவணை முறையில் பணம் செலுத்தும் வசதி கொண்ட சிறப்பு கடன் அட்டை!

வாடிக்கையாளர்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க, தவணை முறையில் பணம் செலுத்தும் வசதி கொண்ட சிறப்பு கடன் அட்டை!


நுகர்வோருக்கான மின்னியல் சாதனங்கள் மற்றும் வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் சில்லறை விற்பனையில் முன்னணியில் உள்ள விவேக் பிரைவேட் லிமிடெட் (Vivek Pvt Ltd), நிறுவனமும் நிதிச் சேவைகளில் முன்னோடியான பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv) நிறுவனமும் இணைந்து வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில், தவணை முறையில் கடனை திரும்பச் செலுத்தும் வசதி கொண்ட இ.எம்.ஐ. பிரிவிலேஜ் கார்ட்டினை (EMI Privileges Card) அறிமுகப்படுத்தியுள்ளன.

Viveks - Bajaj Finserv - EMI Privilege Card Launch Photoவாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை விவேக்ஸ் அங்காடிகளில் வட்டி ஏதுமின்றி, மாதத் தவணையில் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு இந்த அட்டையினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ’ஸ்வைப், சைன், பை’ (Swipe, Sign, Buy) என்ற கான்சப்ட் அடிப்படையில், இந்த அட்டையைத் தேய்த்துவிட்டு கையெழுத்து போட்டு உடனடியாகபொருட்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் அதிவேக அனுபவத்தை இது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.

இந்த புதிய திறன் அட்டையானது, மாதத் தவணையை செலுத்துவதற்கு அதிகமான ஆவண முறைசார்ந்த சிக்கல்கள் ஏதுமில்லாமல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வழிவகுக்கிறது.

ரூ. 15,000 முதல் ரூ. 3,00,000 வரை, முன் அனுமதி பெறப்பட்ட கடன் தொகையை பெறுவதற்கு இது வழி செய்கிறது. வாடிக்கையாளர்கள் இதனைப் பயன்படுத்தி ரூ. 7000 முதல், பல்வேறு மதிப்புள்ள பொருட்களையும், வீட்டுப் பயன்பாட்டு சாதனங்களையும் வாங்கிய பின்னர், எளிதாக அதனை 8 முதல் 24 மாதங்கள் வரை தவணை முறையில் திரும்பிச் செலுத்தலாம். இந்த அட்டையைப்பெற விரும்புவோர் ஆண்டுக் கட்டணமாக – குறைந்தளவு ரூ. 349-ஐ மட்டும் ஒருமுறை செலுத்தினால் போதுமானது. அதற்குப் பின் புதுப்பித்தல் கட்டணம் ஏதுமில்லை.

புதிய வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, விவேக்சும் பஜாஜ் பைனான்சும் சேர்ந்து ஒரு தகவல் மீட்புத் தளத்தினை (Data Mining Model) இதற்கென சிறப்பாக உருவாக்கியுள்ளன. இதன் மூலம் அங்காடிகளில் பொருள் வாங்கும் போதே, தவணை முறையில் தொகை செலுத்தும் ஏற்பாடும் உடனடியாக செய்யப்படும். வாடிக்கையாளர்களுக்கு உரிய கடன் எல்லையும் இதன் மூலமே தெரிவிக்கப்படும்.

பஜாஜ் பின்சர்வுடன் இணைந்து இந்த இ.எம்.ஐ. பிரிவிலேஜ் அட்டையினை அறிமுகப்படுத்துவதைப் பற்றி விவேக்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் திரு. பி.ஏ. சீனிவாசா கூறுகையில், “பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் நுகர்வோர் கடன் சார்ந்த விரிவான அனுபவத்தை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இப்புதிய கடன் அட்டை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக உள்ளது. இதனைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் அனைத்து விதமான தேவைகளும், அதாவது மளிகைச் சாமான்கள் முதல் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நாகரிக அணி வகைகள், அவற்றிற்கான துணைப் பொருட்கள், சிறிய சாதனங்கள் முதல் அறைகலன்கள், வீட்டை அழகுப்படுத்துவதற்கான திரைச்சீலைகள் உள்ளிட்ட, எல்லாரும், எல்லாமும் பெறுவதற்கான ஆற்றல் மிகு அட்டையாக திகழும்” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “எங்கள் மதிப்புமிகு வாடிக்கையாளர்கள்,எந்த விவேக்ஸ் அங்காடியில் இருந்தும், எந்தப் பொருளையும் இந்த இரு நிறுவனங்களுக்குரிய அட்டையைப் பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம். இதனைக் கணினி வழியாகவே பெற்றுக் கொள்வதற்கு உரிய உதவிகளை உடனுக்குடன் செய்ய, விவேக்ஸ் அங்காடியின் பணியாளர்கள் காத்திருக்கிறார்கள். விண்ணப்பித்த நாளிலிருந்து 25 நாட்களுக்குள் இந்த அட்டை வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஏற்கெனவே 80 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் குறுந்தகடுகள், செல்பேசிகள், அறைகலன்கள் வாங்குவதற்கு – தேவையான கடன் தொகையை அளித்துள்ளது. இந்த அனுபவத்துடன் விவேக்சின் வாடிக்கையாளர்களைக் கையாளும் திறன்களையும் இணைத்து அவர்களுக்கு இன்னும் கூடுதலான வசதிகளை அளிப்பதற்கான ஒருங்கிணைப்பாக இது அமையும். தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கும், அவர்களுக்குரிய கடன் எல்லையை நிர்ணயித்து விவேக்ஸ் அங்காடிகளிலேயே இந்த வசதியும் அளிக்கப்படும்.
“இப்புதிய கடன் அட்டை அறிமுகத்தின் மூலம் விவேக்ஸ் உடனான எங்கள் கூட்டாண்மை மேலும் வலுப்பெறுகிறது. பஜாஜ் நிறுவனத்தில் கடன் பெறுவோரும், கடன் பெறாத வாடிக்கையாளர்களும் விவேக்ஸ் அங்காடியில் மாதத் தவணையில் பொருள் வாங்குவதற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பஜாஜ் பைனான்ஸ் அளிக்கும் இந்தத் தவணை முறையில் பணம் செலுத்தும் கடன் அட்டையைப் பயன்படுத்துவதன் மூலம் விவேக்ஸ் வாடிக்கையாளர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்” என்று பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர் திரு. அமித் ரகுவன்சி தெரிவித்தார்.

‘பணம் அல்லாத பரிமாற்றங்களை அரசு ஊக்குவித்து வரும் இக்காலகட்டத்தில், வாடிக்கையாளர்கள் பணமாகவோ, காசோலையாகவோ செலுத்த வேண்டிய கட்டாயத்திலிருந்து விடுபட்டு, வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களையும் மற்ற சாதனங்களையும் வாங்குவதற்கும் தவணைகளைச் செலுத்துவதற்கும் இப்புதிய அட்டையின் அறிமுகம் அமைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டுக்குள் இந்திய மக்களை நிதி அதிகாரம் மிக்கவர்களாக ஆக்கும் அரசின் முயற்சிக்கு துணை நிற்க்கவும் இது அமைந்துள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

About Ragavendhar

Check Also

TAMIL NADU HEALTHCARE INDICATORS ON PAR WITH DEVELOPED COUNTRIES: DR C VIJAYA BASKAR

Chennai, September 20th 2019: Healthcare Industry should device ways and means to make advance technologies accessible to …