Monday , November 19 2018
Home / District-News / ராஜீவ்காந்தியின் 75 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் தமிழ்நாடு காந்தி மன்ற இயக்கம் சார்பாக இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

ராஜீவ்காந்தியின் 75 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் தமிழ்நாடு காந்தி மன்ற இயக்கம் சார்பாக இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் 75 -வது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதே போல் திண்டுக்கல் நாகல்நகர் தண்ணீர் தொட்டி அருகே தமிழ்நாடு காந்தி மன்ற இயக்கத்தின் சார்பாக ராஜீவ்காந்தியின் பிறந்த தினம் தமிழ்நாடு காந்தி மன்ற இயக்க பொதுச்செயலாளர் மருது தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய ஒருமைப்பாட்டு இயக்க மாநில தலைவர் அப்துல்ஜப்பார் கலந்து கொண்டு அமரர்.ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர்களை தூவினார். பின்னர் அவர் பேசுகையில் ராஜீவ்காந்தி மிகவும் இளம் வயதில் தமது 40 வயதிலேயே இந்தியாவின் பிரதமரானார். அதுமட்டுமல்ல, உலகிலேயே இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களான சிலரில் இவரும் ஒருவர் . 1984 அக்டோபர் 31 அன்று அவரது தாயார் கொடுமையான முறையில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரதமராகவும் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்கும் திறனும் மனநிறைவையும் வேறுயாருக்கும் வராது. தனது சொந்த வாழ்க்கையில் உள்ள சிரமங்களை பொருட்படுத்தாமல் நாட்டிற்காக தனது கடமையைத் தெளிவாகவும் , துல்லியமாகவும் சிறப்பான முறையிலும் செயல்படுத்தினார். நவீன எண்ணங்களும் அதிக தொழில்நுட்பமும் தெரிந்திருந்தாலும் அவர் எளிய வாழ்க்கையையே வாழ்ந்தார். அவர் அடிக்கடி கூறுவது ஒன்றுதான். இந்தியாவை பொறுத்தவரை அவரது முக்கிய நோக்கம் ஒற்றுமை அதன் பிறகு நாட்டை 21-வது நூற்றாண்டிற்காக தயார் செய்வது போன்றவையாகும் என பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் கொண்டசாமி , கண்ணதாசன் , காந்திய மக்கள் இயக்க மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

About Admin

Check Also

தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் ( குலாலர்) சங்கம் நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் ( குலாலர்) சங்கம் தமிழ்நாடு மண் பாண்டத் தொழிலாளர்கள் ( குலாலர்) சங்கத்தின் சென்னை மண்டல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.