Wednesday , January 22 2020
Home / Tamilnadu Police / முத்தையால்பேட்டை பகுதியில் மாவா விற்பனை செய்த நபர் கைது.

முத்தையால்பேட்டை பகுதியில் மாவா விற்பனை செய்த நபர் கைது.

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சூ-3 முத்தையால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (18.2.2018) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மண்ணடி, கச்சாலீஸ்வரர் கார்டன் 3 வது சந்து எண்.1 என்ற முகவரியில் உள்ள வீட்டை சோதனை செய்த போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா பாக்கெட்டுகளை தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அதன்பேரில், தடை செய்யப்பட்ட மாவா பொருட்களை தயாரித்து விற்பனை செய்த விஜயகுமார், வ/38, த/பெ.ராமுதிலவன், மண்ணடி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 400 பாக்கெட் மாவா, மிக்ஸி-1, கிரைண்டர்-1, மற்றும் ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட விஜயகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

குற்றவாளிகளை பிடித்த காவல் ஆளிநர்கள் மற்றும் குற்றவாளிகளை துரத்தி சென்று பிடிக்க முயன்ற நபரை (பொதுமக்கள்) சென்னை பெருநகர காவல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.