Thursday , November 14 2019
Home / Cinema / மக்கள் சேவகர் என்ற பட்டத்தை ஆரிக்கு வழங்கியது DR.R.K.S கல்லூரி

மக்கள் சேவகர் என்ற பட்டத்தை ஆரிக்கு வழங்கியது DR.R.K.S கல்லூரி

    நாட்டு விதைகளை விதைத்து இயற்க்கை விவசாயத்திற்கு மாறுவோம் நம் தாய்மொழி தமிழுக்கு  கையெழுத்தை மாற்றுவோம்  என்று முழங்கிய நடிகர் ஆரி அவர்களுக்கு DR.R.K.S கல்லூரி நிர்வாகம் “மக்கள் சேவகர்” என்ற பட்டமளித்து விருது வழங்கி கௌரவித்தார்கள் .
   DR. R. K. Shanmugam Educational Trust சார்பாக மறைந்த DR. R. K.சண்முகம் (சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர்)பெயரில் 1997-ம் வருடம்  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  DR.R.K.Shanmugam College of Arts and Science என்ற கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.ஏழை  எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இன மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி வருடந்தோறும் ஆண்டுவிழா நடத்தி பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது. 
    இந்த வருட ஆண்டு விழாவில் கலை நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் எங்கள் நிர்வாகம் சார்பாக மக்களுக்காக தன்னலம் பார்க்காமல் நற்பணிகளை முன்னெடுக்கும் பிரபலங்களில் ஒருவரை பாராட்டி கௌரவிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
அவ்வகையில்  –  
    பிரபல நடிகர்களே பொது சேவை செய்ய தயக்கம் காட்டும் வேளையில் வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் தன் சினிமா பணிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை முன்னெடுக்கும் பிரபலங்களில் நடிகர் ஆரியும் ஒருவர்.
   திரைப்படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் வேளையிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளை பொறுப்பேற்று நடத்துவதிலும் பல நலத்திட்ட விழாக்களில் கலந்துகொண்டு அவர்களை ஊக்குவிப்பதிலும் நடிகர் ஆரி  மற்ற தொழில்முறை நடிகர்களிடமிருந்து தனித்து தெரிகிறார்.
   “மாறுவோம் மாற்றுவோம்” என்ற அறக்கட்டளையை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் இவர் விவசாயம்,ஜல்லிக்கட்டு,நெடுவாசல் என மக்கள் பிரச்னையில் தீவிரம் காட்டிய சமூக சேவகராக அறியப்படுகிறார்.
   இயற்கை விவசாயம் காக்கவும்  நம் பாரம்பரிய நாட்டு விதைகளை பயன்படுத்தி பாதுகாக்கும் பொருட்டு  ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததை கின்னஸ் உலகசாதனை புத்தகம் சாதனையாக அங்கீகரித்துள்ளது.
      சமீபத்தில் வட  அமெரிக்க தமிழ் சங்க பேரவை ( ‘பெக்னா’)வுடன் இணைந்து “மாறுவோம் மாற்றுவோம்” அறக்கட்டளை சார்பாக   தாய்மொழியில் கையெழுத்திடும் புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மக்களிடையே ஏற்படுத்தியதும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது..
  நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாடுகளை முற்றிலும் ஒழிக்க வேண்டி பிரச்சாரம் மேற்கொண்டு தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முக்கிய காரணியாக அமைந்தார்.
   மேலைநாட்டு குளிர்பானங்களை தவிர்த்து நம் நாட்டு இயற்கை பானங்களான இளநீர்,பதநீர் அருந்துவதை மக்களிடையே ஊக்கப்படுத்தினார்.சமீபத்தில் வடபழனி போக்குவரத்துக்கு காவலர்களுடன் இணைந்து மக்களிடையே போக்குவரத்துக்கு விதிகளை மதிக்க வேண்டிய அவசியத்தை பிரச்சாரம் செய்தார்.       இவர்தம் சேவைகளையும் தொண்டுகளையும் பாராட்டி அங்கீகரிக்கும் விதமாக  கல்லூரி  ஆண்டு விழாவில் “மக்கள் சேவகர்” என்ற பட்டமளித்து கௌரவிக்க முடிவு செய்யப்பட்டு மேற்கண்ட விழா கடந்த மார்ச்  1ந் தேதி (இன்று)  கல்லூரி வளாகத்தில் உள்ள  அறிஞர் அண்ணா கலையரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது.
   நாட்டு விதைகளை பயன்படுத்தி மக்கள் இயற்கை  விவசாயத்திற்கு மாறவேண்டும் எனவும் அவரவர் தம்  தாய்மொழி கையெழுத்து இட வேண்டும் தமிழுக்காக மட்டுமல்லாமல் அவரவர் தாய்மொழியே  சிறந்தது என்று   குரல் கொடுத்தமைக்காகவும் நடிகர் ஆரி  அவர்களுக்கு   எங்கள் கல்லூரி சார்பாக  “மக்கள் சேவகர்”  என்ற பட்டமளித்து விருது வழங்குவதில் பெருமை கொள்கிறோம் என்று DR.R.K.S கல்லூரி chairman DR.மகுடமுடி மற்றும் கல்லூரி இயக்குனர் என்ஜினீயர் திரு.M .R .நாராயணன்அவர்களும் கூறினார்கள்.
   நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக  Dr.மதன்குமார் ஸ்ரீனிவாசன் (இணைத்துணை தலைவர் -அக்சன்சர்,பெங்களூரு), Dr.M.C.சாரங்கன் I.P.S பங்கேற்றார்.Dr.M.C.சம்பந்தம் B.E.,M.B.A.,Ph.d.,(மேலான் கூடுதல் இயக்குனர்,தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம்,தமிழ்நாடு அரசு) ஆகியோர் கலந்து கொண்டனர்

About Admin

Check Also

Sony Pictures presents CHARLIE’S ANGELS

CURTAIN RAISER – Created by Ivan Goff & Ben Roberts as a television series in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.