போலி தயாரிப்புகள் உற்பத்தி மற்றும் விற்பனைத் தொடர்பாக மூன்று இடங்களில் சோதனை. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்

சென்னை, அக்டோபர் 2020: கடந்தவாரம் சட்ட அமலாக்கத் துறையினர் சென்னை பாரிஸில் உள்ள, தேவராஜ முதலி தெரு, நைனியப்ப நாயக்கன் தெரு மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை, முனியப்பா தெருவில் உள்ள இரண்டு உற்பத்தி ஆலைகள் மற்றும் ஒரு மொத்த விற்பனை நிலையத்தில் சோதனைகளை நடத்தினர்.

இந்த இடங்களில் கழிப்பறை மற்றும் சுத்தம் செய்யும் சில முன்னணி பிராண்டுகளின் போலி தயாரிப்புகளை உற்பத்தி செய்வதும், விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டது.

இந்த மூன்று இடங்களில் இருந்து அனைத்து போலி தயாரிப்புகள் மற்றும் மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக போலி தயாரிப்பில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். கணிசமான அளவில் முன்னணி பிராண்டுகளின் போலி தயாரிப்புகள் கைப்பற்றப்ட்டன.

தமிழ்நாடு மாநிலத்தில் சில்லறை விற்பனை துறையில் பெரிய அளவில் கைப்பற்றப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

முதல் இரண்டு சோதனைகளின் தொடர்ச்சி நடவடிக்கையின் காரணமாக சந்தையில் பல்வேறு கடைகள் மூடப்பட்டன. போலி தயாரிப்புகள் நுகர்வோர்களை சென்றடையாமல் இருப்பதையும், தங்களின் மதிப்புமிக்க அறிவுசார் சொத்துரிமைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்வதற்காக சட்ட அமலாக்க துறையினரும் பிராண்டு உரிமையாளர்களும் மற்றும் ஆற்றல்மிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

About admin

Check Also

MY’ – India’s First Safety Lifestyle Company Launches personal protection products to redefine personal lifestyle

Chennai, November, 2020: As the need for quality personal protective gear is increasingly becoming a critical …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *