Tuesday , October 23 2018
Home / Tamilnadu Police / போலி ஆவணங்கள் தயாரித்து, பாஸ்போர்ட் பெற முயன்ற இலங்கை தமிழர் உட்பட 5 பேர் கைது.

போலி ஆவணங்கள் தயாரித்து, பாஸ்போர்ட் பெற முயன்ற இலங்கை தமிழர் உட்பட 5 பேர் கைது.

கன்னியாகுமரி, பெருமாள்புரத்தைச் சேர்ந்த சஞ்சீவி (எ) சுதர்சன் என்பவருக்கு சபீக் அகமது மற்றும் 3 நபர்கள் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்தும், அதனை அடையாள ஆவணமாக வைத்து பாஸ்போர்ட் பெற்றுத் தருவதாக கிடைத்த தகவலின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு பாஸ்போர்ட் மோசடி தடுப்புப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ரகசியமாக கண்காணித்ததில், இவர்கள் போலி ஆவணங்களை தயார் செய்து அதன் மூலம் பாஸ்போர்ட் பெற முயன்றது தெரியவந்தது.

அதன்பேரில், சஞ்சீவி, வ/29, த/பெ. ராதாகிருஷ்ணன், எண்.74, காமராஜர் நெடுஞ்சாலை, தந்தை பெரியார் நகர், ஆழ்வார் திருநகர், சென்னை-87, என்ற முகவரியில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அந்த முகவரியில் வசிக்கும் அவ்வீட்டின் உரிமையாளர் கனகவள்ளி என்பவர் இந்த முகவரியில் சஞ்சீவி என யாருமில்லை எனவும், இவ்வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் கடையின் உரிமையாளர் குமார் அவ்வப்போது சில நபர்களுடன் வருவதாக கொடுத்த தகவலின்பேரில், மேற்படி பாஸ்போர்ட் மோசடி தடுப்புப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மேற்படி சபீக் அகமது, தனது கூட்டாளிகளான குமார், சஞ்சீவி மற்றும் பெர்னட் சேவியர் ஆகியோருடன் சேர்ந்து போலி சான்று ஆவணங்கள் தயாரித்து, பாஸ்போர்ட் பெற முயற்சித்தது தெரியவந்தது.

மேற்படி குற்றவாளிகள் 4 பேரும் கூட்டாக சேர்ந்து, பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு சென்று கண்காணித்து, அங்கு பாஸ்போர்ட் கிடைக்காமலும், ஏதேனும் காரணங்களுக்காக பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்ட நபர்களை பிடித்து, அவர்களிடம் பாஸ்போர்ட் பெற்று தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு, அதன்பேரில் போலியான முகவரியில் தங்கியிருப்பது போன்று அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்களை போலியாக தயாரித்து, இணையதளம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து, பாஸ்போர்ட் பெற முயன்றது தெரியவந்தது.

அதன்பேரில், மேற்படி மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.சஞ்சீவி (எ) சுதர்சன், வ/29, த/பெ.கைலாயபிள்ளை, எண்.328, எஸ்.எல்.ஆர்.கேம்ப், பெருமாள்புரம், கொட்டாரமஞ்சள், கன்னியாகுமரி மாவட்டம், 2.சபீக் அகமது, வ/29, த/பெ.சுலைமான், எண்.28ஏ, சி.எம்.பி.லேன், அதிராமப்பட்டிணம், தஞ்சாவூர் மாவட்டம், 3.முகமது சலீம், வ/60, த/பெ.கவுஸ் முகைதீன், எண்.1/202, 26வது தெரு, 1வது பிளாக், முத்தமிழ்நகர், சென்னை-118, 4.குமார், வ/30, த/பெ.சேது, எண்.74, காமராஜர் பிரதான சாலை, ஆழ்வார்திருநகர், சென்னை-87, 5.பெர்னாட் சேவியர், வ/67, த/பெ.சவரிமுத்து, எண்.55/150, பெரியார்பாதை, சூளைமேடு, சென்னை-94 ஆகிய 5 பேரை இன்று (13.11.2017) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 5 பேரும் விசாரணைக்குப் பின் இன்று (13.11.2017) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

வங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 3 பேர் கைது.

சென்னை, பழவந்தாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் தெருவில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 05.8.2018 அன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.