Thursday , July 19 2018
Home / Tamilnadu Police / பெரியமேடு மற்றும் அபிராமபுரம் பகுதியில் 4 பேர் கைது. சுமார் 15,000 பான் மசாலா பாக்கெட்டுகள் 4 கிலோ மாவா பறிமுதல்.

பெரியமேடு மற்றும் அபிராமபுரம் பகுதியில் 4 பேர் கைது. சுமார் 15,000 பான் மசாலா பாக்கெட்டுகள் 4 கிலோ மாவா பறிமுதல்.

https://kutabalinews.com/mecca-slots-online-free-ur44jt/ December 16, 2017 Tamilnadu Police Leave a comment 123 Views

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, ழு-2 பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (16.12.2017) காலை, அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பெரியமேடு, வாத்தியார் கந்தப்ப தெரு மற்றும் சாமி பிள்ளை தெரு சந்திப்பில் 4 மூட்டைகளுடன் சந்தேகப்படும்படி நின்றிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கணவன், மனைவியை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.

சந்தேகத்தின்பேரில், மூட்டையை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பாக்கெட்டுகள் மற்றும் மாவா இருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், தாணுபிரசாத், வ/55, த/பெ. கந்த பிரதான், சத்ரபூர், கம்ஜான் மாவட்டம், ஒடிசா மாநிலம் மற்றும் அவரது மனைவி பானு, பெ/வ.50, க/பெ. தாணு பிரசாத் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கண்ணன், ராதா, சபாக், மீரஜ், டுகூக்ஷ உட்பட 13,230 பான் மசாலா பாக்கெட்டுகள் மற்றும் 4 கிலோ மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இவர்கள் மேற்படி பான் மசாலா பாக்கெட்டுகளை ஒடிசா மாநிலத்திலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மேற்படி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதே போல, நு-4 அபிராமபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (16.12.2017) அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பான்மசாலா மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த குற்றவாளிகள் பிரபாகரன், வ/32, த/பெ. ராமசாமி, எண்.13ஹ, சூ.ளு. கார்டன் முதல் தெரு, அபிராமபுரம், சென்னை மற்றும் அதே முகவரியைச் சேர்ந்த அசோக்குமார், வ/47, த/பெ.துரைசாமி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேற்படி வீட்டிலிருந்து ரெமோ, சூப்பர் ஸ்டார், சைனி, கபாலி, ஹான்ஸ் ஆகிய 2,276 பான் மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

About Admin

Check Also

அயனாவரம் பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்த வாலிபர் கைது.

சென்னை, நம்மாழ்வார்பேட்டை பகுதியில் வசித்து வரும் திருமதி.ரஞ்சிதா, வ/39 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் மகள் ராதா, வ/5 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *