
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், பரங்கிமலை ஒன்றியம், பீர்க்கன்காரணை பேரூராட்சி அதிமுக சார்பில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 71வது பிறந்தநாளையொட்டி, மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் அறிவிப்பின்படி, பேரூராட்சி கழக செயலாளர் ஏ.வி.சம்பத்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற தெரு முனை பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சி கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.கபாலீஸ்வரன் சிறப்புரையாற்றினார். உடன் ஒன்றிய கழக செயலாளர் என்.சி.கிருஷ்ணன், தாம்பரம் நகர கழக செயலாளர் எம். கூத்தன், பேரூராட்சி கழக அவைத்தலைவர் வி.சந்திரன், பேரூராட்சி கழக துணை செயலாளர் ஜி.ஹரிபாபு, கிருஷ்ணன் (மா.பி), மாலதிசம்பத்குமார், எஸ்.கங்காதேவி, ஏ.வி.ரகுராமன், ஆர்.நாகராஜன், மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழகத்தினரும், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.