Monday , July 23 2018
Home / Tamilnadu Police / பட்டாபிராம் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேர் கைது.
Illustration of a police station building on a white background

பட்டாபிராம் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேர் கைது.

tear ass blacks fucking white guys December 23, 2017 Tamilnadu Police Leave a comment 110 Views

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்கும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், உதவி ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, கூ-9 பட்டாபிராம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (22.12.2017) மாலை சுமார் 04.00 மணியளவில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பட்டாபிராம், கோபாலபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு 3 பேர் சேர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை துண்டு காகிதத்தில் எழுதி கொடுத்து ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த 1.பொன்னம்பலம், வ/62, த/பெ.ஏகாம்பரம், எண்.12,மசூதி தெரு, பட்டாபிராம், சென்னை, 2.சையது முகமது, வ/43, த/பெ.இப்ராகிம், எண்.13, தேசிகர் தெரு, வடபழனி, சென்னை-26. 3.சத்யா, வ/44, த/பெ.சீனிவாசன், எண்.4, நீலமேகம் தெரு, காமராஜர் நகர், ஆவடி, சென்னை ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.1,000/-, நோட்டு புத்தகம் மற்றும் துண்டு காகித சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபர் கைது.

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசிக்கும் கவிதா, வ/17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் +2 படித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *