Tuesday , October 22 2019
Home / EDUCATION / நீதிபதிகள் மாணவர்களுடன் கலந்துரையாடல் மனசாட்சியின் வெளிப்பாடே சட்டம் நீதிபதி பேச்சு

நீதிபதிகள் மாணவர்களுடன் கலந்துரையாடல் மனசாட்சியின் வெளிப்பாடே சட்டம் நீதிபதி பேச்சு

 தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்   வரவேற்றார்.தேவகோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மோகனா,அரசு வழக்கறிஞர் சொர்ணலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேவகோட்டை வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிதிமன்ற  நீதிபதி முருகன்  தலைமை தாங்கி மாணவர்களிடம் பேசுகையில், சட்டம் என்பது ஒவ்வொருவரின் மனசாட்சியின் வெளிப்பாடு ஆகும். அனைவரிடமும் தனி திறமைகள் உண்டு.குற்றம் என்ற புற்றுக்குள் கையை விட்டால் சட்டம் என்கிற பாம்பு கடிக்கும் என்கிற ஜப்பானிய பழமொழி மூலம் சட்டம் பற்றி  எளியமையாக விளக்கினார்.பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டம், இலவச சட்ட மையம் தொடர்பான சட்டம்,பொதுநல வழக்கு தொடர்பான தகவல்கள்,சட்டத்தின் அடிப்படை கூறுகளை விரிவாக விளக்கினார்.மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார் .  நான் ஏன் இந்தியாவை விரும்புகிறேன் என்கிற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. தேவகோட்டை சார்பு நீதி மன்ற சிரசாதர் பாலசுப்ரமணியன் ,வட்ட சட்ட பணிகள் குழுவின் அலுவலர்கள் ராஜன் ,வெற்றி செல்வன் ,ஜேசுதாஸ் ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.மாணவர்கள் ஐயப்பன்,ஜனஸ்ரீ , ஜோயல்,சந்தியா,வெங்கட்ராமன்,சிரேகா ஆகியோர் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெற்றனர்.

About Admin

Check Also

Tech Mahindra Collaborates With Sai Prasanna Foundation to Enhance Green Cover Around its Chennai Campus

Chennai, October 16, 2019: Tech Mahindra, a leading provider of digital transformation, consulting and business …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.