Saturday , March 23 2019
Home / Tamilnadu Police / தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆணையாளர் பொங்கல் விழா கொண்டாடினார்.

தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆணையாளர் பொங்கல் விழா கொண்டாடினார்.

புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில் இன்று (13.01.2019) காலை நடைபெற்ற காவலர்கள் குடும்பத்தினரின் பொங்கல் விழாவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன் இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டார். காவலர் குடும்பத்தினரைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்கள் மற்றும் காவலர்களுக்காக நடத்தப்பட்ட ஓட்டபந்தயம், சிலம்பாட்டம், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகளை காவல் ஆணையாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பார்த்து ரசித்தனர். பின்னர், இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கிப் பாராட்டி அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர்கள் திரு.மகேஷ்குமார்அகர்வால், இ.கா.ப., (தெற்கு), திரு.அருண், இ.கா.ப (போக்குவரத்து) இணை ஆணையாளர் (கிழக்கு) திரு.பாலகிருஷ்ணன், இ.கா.ப. (பொறுப்பு தெற்கு மண்டலம்), புனித தோமையர் மலை துணை ஆணையாளர் திரு.முத்துசாமி, இ.கா.ப, ஆயுதப்படை-2 துணை ஆணையாளர் திரு.சோமசுந்தரம் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

443 கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாட்டினை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குமணன்சாவடி சந்திப்பிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை உள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 443 கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாட்டினை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.