Sunday , October 20 2019
Home / Tamilnadu Police / திருவொற்றியூர் பகுதியில் மதுபாட்டில்கள் மற்றும் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த நபர் கைது.

திருவொற்றியூர் பகுதியில் மதுபாட்டில்கள் மற்றும் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த நபர் கைது.

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, எச்-8 திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (19.12.2017) மாலை 4.00 மணியளவில் திருவொற்றியூர் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பாலகிருஷ்ணாநாயுடு காலனி, அருகே ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு ஒருவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த நாகராஜன், 34, த/பெ.கண்ணன், எண்.18, பி.கே.என் காலனி 1 வது தெரு, திருவொற்றியூர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 48 மதுபானபாட்டில்கள் மற்றும் 40 கிலோ ஜர்தா புகையிலை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட நாகராஜன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

காவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த துரைப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை யொட்டி பொதுமக்கள் விழிப்புணர்வாக எந்த அச்சமுமின்றி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.