Thursday , September 19 2019
Home / State-News / திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் சாஸ்திரி இந்தோ-கனடிய கழக துணைத்தலைவராகத் தேர்வு

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் சாஸ்திரி இந்தோ-கனடிய கழக துணைத்தலைவராகத் தேர்வு

திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் நடந்த சாஸ்திரி இந்தோ-கனடிய கழகத்தின் வருடாந்திர சந்திப்பு ஏப்ரல் 30ம் தேதி நடைபெற்றது. இதில் கல்லூரி இயக்குனர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் அவர்கள் இந்தாண்டு துணைத்தலைவராகவும், அடுத்த ஆண்டின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாஸ்திரி இந்தோ-கனடிய கழகமானது இந்தியா மற்றும் கனடா நாடுகளின் கல்வி, அரசு, குடியியல் மற்றும் தொழில் துறைகளில் வளர்ச்சியடையும் வகையில் ஆராய்ச்சி மற்றும் கருத்தரங்குகள் அமைப்பதில் பெரும்பங்காற்றுகிறது. மேலும் இதன் வேலைவாய்ப்பு மற்றும் கூட்டுறவு திட்டங்களின்மூலம் இருநாட்டு மாணவர்களும் பயனடைகின்றனர். மேலும், இதன் நூலகத் திட்டத்தின்மூலம் இக்கழகத்தில் உறுப்பினர்களாக இருக்கும் கல்லூரிகளின் மாணவர்களும் பேராசியர்களும் பயனடைகின்றனர்.

2005ம் ஆண்டு இருநாட்டு அமைப்பான இந்த கழகமானது ஐஐடி, என்ஐடி உட்பட 110 இந்திய கல்லூரிகளையும் 34 கனடா பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிய மிகப்பெரிய அமைப்பாகும். சட்டம், தொழில்நுட்பம், மேலாண்மை, அறிவியல் துறைகளில் ஐக்கிய நாடுகளின் இலக்குகளை அடைவதிலும் பெரும்பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது.

About Admin

Check Also

அப்துல் காலம் நினைவு தினம்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.