Wednesday , September 26 2018
Home / Business / டோயட்டோ வாகனத்தின் புதிய வெளியீடுகள்… நியூ கேம்ரேஹைபிர்டு-ஆல் நியூ பைரஸ் வாகனங்கள் அறிமுகம்

டோயட்டோ வாகனத்தின் புதிய வெளியீடுகள்… நியூ கேம்ரேஹைபிர்டு-ஆல் நியூ பைரஸ் வாகனங்கள் அறிமுகம்

All new Toyota Prius
சர்வதேச அளவில் ஹைபிர்டு எனப்படும் கலப்பின வாகனங்களை 10.5 மில்லியனுக்கும் அதிகமாக விற்று டோயட்டோ மோடடார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. எனவே, இந்தியாவில் கலப்பின அடிப்படையிலான வாகனங்களைத் தயாரித்து வெளியிடு வதில் டோயட்டோ மோட்டார் நிறுவனம் பெருமிதம் கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் நியூ கேம்ரேஹைபிர்டு- ஆல் நியூ டோயட் டோபைரஸ் ஆகிய வாகனங்களை அறிமுகப்படுத்துகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வானங்களை பரவாலகப்பயன்படுத்துவது மூலம் மட்டுமே சுற்றுச்சூழலுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என டோயட்டோ நம்புகிறது.

இதன்படி 10 மில்லியன் ஹைபிர்டு வாகனங்களை உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் பயன்படுத்திவருகின்றனர். இந்த வாகனங்கள் மிகுந்த அதி நவீன தொழில் நுட்பத்துடன், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக விளங்குகிறது.

காம்ரேஹைபிர்டு வாகனமானது இந்தியாவின் முதல் வலு வான வசதியான ஹைபிர்டு வாகனமாகும். இந்தியாவில் காம்ரேஹைபிர்டு வாகனமானது கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

நியூ காம்ரேஹைபிர்டு வாகனமானது, அதி நவீன ஹைபிர்டு தொழில்நுட்பம், நல்ல சிறப்பான வசதி, பாதுகாப்பு அம்சங்களில் சமரசம் செய்து கொள்ளாத நிலை போன்ற அம்சங்களைக்கொண்டு வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தி நியூ காம்ரேஹைரிப்டு வாகனமானது, எரி பொருள் சிக்கனத்துடன் நவீன தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.2.5 எல் என் ஜின் பொருத்தப்பட்டுள்ளதுடன், அதி நவீன ஹைபிர்டு தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அது மிகச் சிறப்பாக எரிபொருள் சிக்கனத்தைகையாள்கிறது. லிட்டருக்கு 19.16 கிலோமீட்டர் செல்லும் அளவுக்கு சான்று அளிக்கப்பட்டிருக்கிறது.

டோயட்டோ வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நியூ காம்ரேஹைபிர்டு வாகனத்திலும் செய்யப்பட்டுள்ளது. 9 எஸ்.ஆர்.எஸ்., திறனுடையகாற்றுபைகள், ஓட்டுநருக்கான கால் மூட்டிகளை பாதுகாக்கும்பை, டயர்களில் காற்றின் அளவைக்கண்காணிக்கும் அமைப்பு, புதிய பின்புற வழிகாட்டி கண்காணிப்பு, புதிய அவசர காலபிரேக்சிக்னல், மலைப்பகுதிகளில் செல்லும் போது பாதுகாப்பு அம்சங்களுடன் ஓட்டும் வசதிகள் என ஓட்டுநருக்கும், பயணிகளுக்கும் பாதுகாப்புகளை உறுதி செய்துள்ளன.

நியூ காம்ரேஹை பிர்டு வாகனத்தின் வெளிப்புற அம்சங்களும் கவரும் வகையில் உள்ளன. விளையாட்டு வாகனம்போன்ற தோற்றுத்துடன் இரு்பபதுடன், ஈயத்தைக் கொண்டசக்கரங்கள்,  பனிகளிலும் ஊடுருவும் திறனுடைய வகையிலான மின்விளக்குகள், எல்.இ.டி., கொண்ட முகப்பு விளக்குகள் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வாகனங்களின் விளக்குகளை எரியூட்ட குறைந்த அளவிலான எரிசக்தியே போதுமானது.

நியூ காம் ரேஹைபிர்டு வாகனத்தின் உள்புறமும் சிறப்பான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ஜினின்சப்தத்தை உள்ளே பயணிக்கும் பயணிகள் அதிகம் உணராமல் இருக்கவும், கதவு கண்ணாடிகள் மிகச்சிறப்பான முறையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆறுவகையிலான வாகனங்களில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ட்ரூப்ளூமைகாமெட்டாலிக், வைட்பேர்ல் கிரிஸ்டல்ஷைன், சில்வர்மெட்டாலிக், க்ரேமெட்டாலிக், ஆட்டிடியூட்பிளாக், அடர் பிரவுன்மை காமெட்டாலிக் ஆகிய வண்ணங்களில் வாகனங்கள் விற்பனைக்கு உள்ளன.

இந்தப் புதியகாம் ரேஹைபிர்டு வாகனமானது, ரூ.31,98,500-க்கு புதுதில்லியில் விற்பனை செய்யப்படுகிறது. FAME எனப்படும் திட்டத்தின் கீழ் வாகனத்தைபெற்றால் அதன் விலையில்ரூ.70 ஆயிரம்வரை குறைக்கப்படும்.

ஹைபிர்டுபயோனியர்: நியூ பைரஸ் வாகனமானது, விளையாட்டு வாகனத்தின்தோற்றத்தைக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனமாகவும் அது திகழ்கிறது. டோயட்டோ புதிய தலைமுறை கட்டமைப்புடன் ஹைபிர்டு தொழில் நுட்பம் போன்ற அம்சங்களைக்கொண்டு பைரஸ் வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. மையஈர்ப்பு விசை முன் எப்போதும் இல்லாத வகையில் குறைவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மிகச் சிறந்த முறையில் எந்த வித பாதிப்பும் இன்றி அலுங்காமல் குலுங்காமல் பயணிக்கலாம். இந்த வாகனத்தில் ஹைபிர்டு தொழில் நுட்பமும், புதிய தலை முறை கட்டமைப்பும் இணைந்திருப்பதால் எரிபொருள் அதிகபட்சதிறன் 26.27 கிலோமீட்டர்-லிட்டர் என்ற அளவில் இருக்கும்.

இதில் 1.8 எல் என் ஜின் பொருத்தப்பட்டுள்ளதால் புகையின் அளவும் மிகக்குறைவாக இருக்கும். இந்த பைரஸ் வாகனமானது அதி நவீன தொழில் நுட்பத்தை வெளிப்படுத்துகிறது. தில்லியில் இதன் விலை ரூ.38,96,040 என்ற அளவில் உள்ளது.

இந்த ப்பைரஸ் வாகனமானது கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.4 மில்லியன் வாடிக்கையாளர்களை அது கொண்டிருக்கிறது. ஹைபிர்டு தொழில் நுட்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமட்டு மின்றி அதனை இந்தியாவுக்குக் கொண்டுவருவதிலும் டோயட்டோ நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. இந்தத்தத்துவத்தின் அடிப்படையில் இப்போது புதிய பைரஸ் வாகனமானது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

வாகனங்களின் அறிமுகத்தின்போது, டோயட்டோகிர்லோஷ் கர்மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஹிடோதாட்சிபனா கூறியதாவது:-

இந்திய வர்த்தகசந்தையானது எங்களுக்கு மிக முக்கிய சந்தையாக விளங்குகிறது. அதிக வாகனங்களை உருவாக்குவது மட்டுமல்ல எங்களது பணி.ஆனால், எரிசக்தி, சுற்றுச்சூழல், பாதுகாப்பு போன்ற மிக முக்கிய அம்சங்களுக்குத் தீர்வுகாண்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. சமூக பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதிலும், ஆட்டோ-மொபைல் சமூகத்தில் நீடித்த வளர்ச்சியைப் பெறவும் டோயட்டோ நிறுவனம் பங்களிப்பைச் செய்து வருகிறது.

இதற்கு சுற்றுச் சூழலுக்கு உகந்த அதற்கு நண்பனாகத்திகழும் வாகனங்களே தீர்வு என நம்புகிறோம். சுற்றுச்சூழலுக்கான தீர்வுகளை நடை முறைப்படுத்துவது என்பதை முக்கிய இலக்காக டோயட்டோ நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இந்த கொள்கையின் அடிப்படையில் 10 மில்லியனுக்கும் அதிகமான ஹைபிர்டு வாகனங்களை ஓட்டக்கூடிய வாடிக்கையாளர்களை பெற்று இருக்கிறோம். எங்களது ஹைபிர்டு தொழில் நுட்பத்தை ஊக்கப்படுத்தக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.வலுவான ஹைபிர்டு தொழில் நுட்பத்தை ஊக்கப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம். சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்கள் அதிகளவு பயன்படுத்தப்படும்போது அது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு சாதகமானதாக்கத்தை ஏற்படுத்தம் என நம்புகிறோம் என்றார்.

டோயட்டோ நிறுவனத்தின் முது நிலை துணைத்தலைவர் திரு அகிடோஷிடேக்முரா கூறியதாவது:-

கேம்ரேஹைபிர்டு வாகனமானது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மற்றும் வலுவானஹைபிர்டுவாகனமாகும். சர்வதேச அளவில் புகழ் பெற்ற டோயட்டோகாம் ரோஹாபிர்டு வாகனமானது, இந்தியாவில் தனது பயணத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கியது. தனது தரம், நம்பகத்தன்மைபோன்ற வற்றின் மூலம் உலகம் முழுவதும் மக்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. டோயட்டோகாம்ரே வாகனத்தின், 95 சதவீத விற்பனையானது இந்தியாவில் நடைபெற்றது. இது ஹைபிர்டு தொழில் நுட்பத்துக்கு இந்தியா அளித்த வெற்றியாகும். இப்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய மேம்படுத்தப்பட்ட காம்ரேஹைபிர்டு வாகனமானது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியையும், வலுவான ஹைபிர்டு தொழில் நுட்பம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தம். ஹைபிர்டு தொழில் நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தி நடை முறைப்படுத்தும் எங்களது முயற்சிகளுக்கு அரசு ஊக்கமளித்துள்ளது. இதற்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், பைரஸ் வாகனமானது இந்தியாவில் டோயட்டோ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட முதல்வாகனமாகும். இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பைரஸ்வாகனமானது,  நான்காவது தலை முறை வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

About Ragavendhar

Check Also

Kotak Life Reimagines Advisor-Consumer Engagement; Launches ‘Smart Sell’

Mumbai,  September, 2018: Kotak Mahindra Life Insurance Company Limited (Kotak Life) today announced the launch of …