Thursday , May 23 2019
Home / News / டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய லியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய லியுறுத்தல்

தருமபுரி சிஐடியு தருமபுரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கதின் 8 ம்ஆண்டு பேரவை கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் பி.தினகரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டதலைவர் எம்.மாரிமுத்து
துவக்கிவைத்து பேசினர். டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டசெயலாளர் ராமமூர்த்தி வேலைஅறிக்கை வாசித்தார்.பொருளாளார் வரவுசெலவு சமர்பித்தார். மாவட்ட நிர்வாகிகள் சுகுமார் ரங்கநாதன் திருப்பதி நஞ்சையன் தீர்மானங்களை முன்மொழிந்தனர். சிஐடியு மாவட்டசெயலாளர் சி.நாகராஜன் நிறைவுறையாற்றினார்.

பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக பி.தினகரன் செயலாளராக எம்.ரங்கநாதன் பொருளாளராக சி.மணி ஆகியோர் புதியநிர்வாகிகளாக தேர்வுசெய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் மதுபான சில்லரை விற்பனைகடைகளை 13 ஆண்டு காலம் நடத்திவருகிறது. அரசின் இதரநிறுவனங்களை காட்டிலும் அதீத வருமானத்தை ஈட்டிவருகிறது. ஆனால் ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய சட்டபடியான ஊதியம் 8 மணி நேர வேலை வார விடுப்பு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் ஊழியர்களின் பணிபாதுகாப்பை உத்திரவாதப்படுத்தவேண்டும். பணிநிரந்தரம் செய்யவேண்டும் மூடப்பட்ட 500 கடைகளின் ஊழியர்களுக்கு மாற்று நிரந்தரபணி வழங்க வேண்டும். தேசியவிடுப்பு வாரவிடுப்பு மிகைநெரஊதியம் வழங்க வேண்டும். ஊழியர் குடும்பத்தினர் அனைவருக்கும் மருத்துவசிகிச்சைக்கு ஈஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்தவேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கான நிலையானை சட்டபடி விதிகள் உருவாக்கவேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

About Ragavendhar

Check Also

இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ”

இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ” கோவையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா, எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவுடன் இணைந்து மிகப்பெரிய …