Wednesday , June 26 2019
Home / District-News / சேலம் மனிதநேயம் கட்சி சார்பில் சாலையில் மரம் நடும் ஆர்ப்பாட்டம்

சேலம் மனிதநேயம் கட்சி சார்பில் சாலையில் மரம் நடும் ஆர்ப்பாட்டம்

சேலம் செவ்வாய்பேட்டை மஜித்தெருவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு  பாதாள சாக்கடை பணிகள் தோண்டப்பட்டன. ஆனால் இதுவரையில் இந்த பகுதியில் சாலைகள் சீர் செய்யாமல் கிடப்பில் இருந்ததால் குண்டு குழியுமாக காணப்பட்டது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடத்தில் ி மனு கொடுத்தும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் சையத் மூசா தலைமையில் அம்மாபேட்டை பகுதி செயலாளர் முஸ்தபா முன்னாள் கவுன்சிலர் இஸ்மாயில் மற்றும் கட்சியை சார்ந்தவர்கள் மஜித் தெருவில் சாலை நடுவில் மரம் நட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்து செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்துகட்சி மாவட்ட தலைவர் சையத் மூஸா  கூறும்போது இந்த பகுதியில் சாலை மிகவும் மோசமாக இருந்து வந்தது.இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகளிடத்தில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.  அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக சாலையில் மரத்தை நட்டு கண்டனத்தை தெரிவித்தோம் என்று கூறினார்.அஸ்தம்பட்டி மண்டல உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் கூறும்போது, இந்த பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை மற்றும் வீடுகளுக்கு  இணைப்பு கொடுக்க டெண்டர் விடப்பட்டது. ஆனால் டெண்டர் எடுத்தவர்கள் பாதியில் விட்டு சென்றதால் பணிகள் தேக்கம் அடைந்தது. விரைவில் இந்த மாதம் 21ஆம் தேதி இந்த பணிகள் தொடங்கும் என தெரிவித்தார். போலீசார் மற்றும் அதிகாரிகள்உறுதி கூறியதன் பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் நிசார் ,துணை செயலாள ர் இஸ்மாயில்,  த.முகமாவட்ட துணை செயலாளர் பெரோஸ், சதாம், பயஸ்அகமது, ரியால் உள்ளிபலர் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

The Ulaga Mahaajothi Thavapeedam Arakattalai trust planted 1000 trees

The Ulaga Mahaajothi Thavapeedam Arakattalai trust, headed by Chithar Adimai Konibaba on Sunday held an …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.