Wednesday , August 21 2019
Home / Tamilnadu Police / சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

குற்றவாளிகளை பிடித்த காவல் ஆளிநர்கள் மற்றும் குற்றவாளிகளை துரத்தி சென்று பிடிக்க முயன்ற நபரை (பொதுமக்கள்) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

  1. கத்தியால் தாக்கி செல்போன் பறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன் உட்பட மூன்று குற்றவாளிகள் பிடிப்பட்டனர். 1 லேப்டாப், 4 செல்போன்கள், 1 கத்தி மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பூர், ஜமாலியாநகர், எண்.20 என்ற முகவரியில் அப்சல் தாஜீதின், வ/17, த/பெ.சாகுல்ஹமீது, (Institute of Leather Technology, Diploma 2nd Year, Tharamani, ) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 18.07.2019 அன்று இரவு 11.00 மணியளவில் பெரம்பூர் State Bank எதிரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு முகத்தில் கைக்குட்டை கட்டிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் அப்சல்தாஜீதினை வழிறித்து செல்போனை கேட்க வாதி கொடுக்க மறுத்ததால் தாங்கள் வைத்திருந்த கத்தியால் அப்சல் தாஜுதினின் தலை மற்றும் வலது தோள்பட்டையில் வெட்டிவிட்டு அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். காயமடைந்த அப்சல்தாஜீதின் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இது குறித்து அப்சல் தாஜீதின் P-2 ஓட்டேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
    இந்நிலையில் நேற்று முன்தினம் (22.07.19) மதியம் சுமார் 1.00 மணியளவில் M-6 மணலி காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமைக்காவலர் திரு.என்.கண்ணன் (த.கா.35378) மற்றும் முதல் நிலைக்காவலர் திரு.எஸ்.தங்கராஜா (மு.நி.கா.எண்.31475) ஆகியோர் மணலி மார்கெட் பகுதியில் வாகனத்தில் சதேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 1.அருண், வ/19, த/பெ.நீலராமர், எண்.60, சர்மா நகர், 3வது தெரு, வியாசர்பாடி 2.செல்வகுமார், வ/23, (AC மெக்கானிக்) த/பெ.முனியாண்டி,எண்.329, நேதாஜி நகர், கக்கன்ஜி காலனி, சர்மா நகர் ஆகிய இருவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் இருவரும் மேற்படி அப்சல் தாஜீதினிடம் செல்போன் பறித்ததை ஒப்புக்கொண்டனர். அதன் பேரில் மேற்படி குற்றவாளிகள் இருவரையும் P-2 ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    P-2 ஓட்டேரி காவல் நிலைய போலீசாரிடம் மேற்படி குற்றவாளிகள் அளித்த தகவலின் பேரில் அவர்களது கூட்டாளியான 17 வயது சிறுவனையும் பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடமிருந்து 1 லேப்டாப், 4 செல்போன்கள், 1 கத்தி மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட அருண் மீது 3 செல்போன் பறிப்பு வழக்குகளும், செல்வகுமார் மீது 1 கொலை வழக்கு மற்றும் 1 கொலை முயற்சி வழக்கு உட்பட மூன்று வழக்குகள் உள்ளது.
    குற்றவாளிகள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி அருண், செல்வகுமார் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
  2. கோயம்பேடு பகுதியில் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிய குற்றவாளிகளை துணிச்சலாக பிடிக்க முயன்றபோது குற்றவாளிகள் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பிச்சென்றனர். போலீசார் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
    முகப்பேர், கோல்டன் ஜார்ஜ் நகர், அம்பிகா தெரு, எண்.107 என்ற முகவரியில் வசித்து வரும் பார்த்தசாரதி, வ/39, த/பெ.சக்திவேல் என்பவர் Ford கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பார்த்தசாரதி நேற்று (23.07.2019) காலை 5.30 மணி அளவில் வேலைக்கு செல்வதற்காக நெற்குன்றம் பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் மேற்படி பார்த்தசாரதியின் பாக்கெட்டிலிருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். உடனே சுதாரித்துக் கொண்ட பார்த்தசாரதி துரத்திச்சென்று குற்றவாளிகளை பிடிக்க முற்பட்டபோது குற்றவாளிகள் பல்சர் இருசக்கரவானத்தை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பார்த்தசாரதி கே-10 கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று இருசக்கர வாகனத்தை கைப்பற்றி குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.
  3. வடக்கு கடற்கரை பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த 3 பேரை பிடித்து கொடுத்த நுண்ணறிவுப்பிரிவு காவலர்
    சென்னை பெருநகர காவல் B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய நுண்ணறிவுப்பிரிவு தலைமைக் காவலர் வி.கே.பாபு (த.கா.16711) என்பவர் 22.7.2019 அன்று இரவு பணியிலிருந்தபோது, நள்ளிரவு சுமார் 01.30 மணியளவில் (23.7.2019) 2வது கடற்கரை சாலையில் நேஷ்னல் ஓட்டல் அருகில் சந்தேகப்படும்படி பையுடன் நின்றிருந்த 3 நபர்களை கண்டு அவர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் பெருமளவு வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதன்பேரில் தலைமக் காவலர் வி.கே.பாபு, அன்றைய இரவு ரோந்து பணியிலிருந்த B-5 துறைமுகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சீனிவாசன் அவர்களுக்கு தகவல் கொடுத்த காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததன்பேரில், பிடிபட்ட 3 பேரையும் ஆய்வாளர் வசம் ஒப்படைத்தார்.
    காவல் ஆய்வாளர் பிடிபட்ட 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், அவர்கள் கொடுங்கையூரைச் சேர்ந்த 1.முகேஷ், வ/23, த/பெ.போத்தி, கொடுங்கையூர், 2.காளிதாஸ், வ/42, த/பெ.கார்மேகம், 3.ராமமூர்த்தி, வ/36, த/பெ.முனியசாமி என்பதும், 3 பேரும் இலங்கைக்கு குருவியாக சென்றுமேற்படி வெளிநாட்டு சிகரெட்டுகளை வாங்கி சென்னைக்கு வந்து பர்மா பஜாரில் விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. அதன்பேரில், B-1 வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, 3 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 440 வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    சிறப்பாக பணிபுரிந்த M-6 மணலி காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.என்.கண்ணன் (த.கா.35378), முதல் நிலைக்காவலர் திரு.எஸ்.தங்கராஜா (மு.நி.கா.எண்.31475), துணிச்சலாக குற்றவாளிகளை பிடிக்க முயன்ற எஸ்.பார்த்தசாரதி மற்றும் இரவு பணியில விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய நுண்ணறிவுப்பிரிவு தலைமைக்காவலர் வி.கே.பாபு (த.கா.16711) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இன்று (24.07.2019) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

About Admin

Check Also

வேளச்சேரி கட்டப்பட்டுள்ள பாய்ஸ் கிளப் கட்டிடம், போலீஸ் பூத், மற்றும் 1362 சிசிடிவி கேமராக்கள் ஆணையாளர் திறந்து வைத்தார்

குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்யவும் சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும், பல குற்றச் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.