Sunday , March 29 2020
Home / Tamilnadu Police / சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார் .

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார் .

சென்னை, இராயப்பேட்டை, அகத்தி முத்தன் தெரு, எண்.13/1 என்ற முகவரியில் வசித்து வரும் கார்த்திக், வ/25, த/பெ பாபு என்பவர் கடந்த 20.12.2019 அன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் மேற்படி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு பின்னர் சில மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது, யாரோ அவரது வீட்டின் பூட்டை திறந்து வீட்டின் முதல் தளத்திலுள்ள 2 பீரோக்களை உடைத்து அதில் வைத்திருந்த 14 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.5,000/-ஐ திருடி சென்றுவிட்டனர். இது தொடர்பாக கார்த்திக் D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், D-3 ஐஸ் அவுஸ் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.V.ஜோதிலட்சுமி தலைமையில், உதவி ஆய்வாளர் செல்வி.R.S.கௌசிகா, தலைமைக்காவலர்கள் திரு.V.சிவபாண்டியன் (த.கா.26590), திரு.K.சுகுமார் (த.கா.26611) முதல்நிலைக்காவலர் திரு.V.திருநாவுக்கரசு (மு.நி.கா.28570) மற்றும் காவலர் திரு.T.சங்கர்தினேஷ் (கா.39337) ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கார்த்திக்கின் வீட்டின் அருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி சதீஷ்குமார், வ/24, த/பெ.ஜனார்த்தனன், எண்.24/13, NSK நகர் முதல் தெரு, அரும்பாக்கம், சென்னை என்பவரை கடந்த 20.12.2019 இரவு சுமார் 11.30 மணியளவில் அவரது வீட்டில் கைது செய்து, அவரிடமிருந்து 14 சவரன் தங்க நகைகள் மற்றும்ரொக்கம் ரூ.5,000/- பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
II. பூக்கடை பகுதியில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் கேலி கிண்டல் செய்த 3 நபர்கள் காவலன் SOS செயலி உதவியால் கைது.
கடந்த 20.12.2019 அன்று இரவு 19.00 மணியளவில் பிராட்வே பேருந்து நிறுத்தத்திலிருந்து கோயம்பேடு நோக்கிச் சென்ற 15G மாநகர பேருந்து, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, பேருந்தில் குடிபோதையிலிருந்த மூன்று நபர்கள், பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண்ணிடம், கேலி கிண்டல் செய்து தகராறு செய்துள்ளனர். உடனே அந்த பெண் காவலன் SOS செயலி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். காவல் கட்டுபாட்டு அறை போலீசார் C-1 பூக்கடை சுற்றுக் காவல் வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் திரு.V.கோட்டீஸ்வரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே உதவி ஆய்வாளர் சுற்றுக்காவல் ரோந்து வாகன ஓட்டுநர் / பூக்கடை காவல் நிலைய இரண்டாம் நிலைக்காவலர் திரு.A.மணிவண்ணனுடன் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று, பேருந்தில் பெண்ணிடம் தகராறு செய்து மூன்று நபர்களை கைது செய்து சி-1 பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சி-1 பூக்கடை காவல் நிலைய ஆய்வாளரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1. அருள்குமார், வ/25, த/பெ.செங்கோடன், எண்.220, அம்பேத்கர் நகர், சென்னாம்பட்டி காலனி, அந்தியூர், ஈரோடு மாவட்டம் 2.ஆனந்தராஜ் வ/24, த/பெ.மாடசாமி, எண்.150, மாரியம்மன் கோயில் தெரு, ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம் 3.பொன்மணிமாறன் வ/24, த/பெ.நல்லதம்பி, எண்-2/36, மாரியம்மன் கோவில் தெரு, ஆத்தூர் தாலுகா, சேலம் மாவட்டம் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்ப டி சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளியை விரைவாக கைது செய்த D-3 ஐஸ் அவுஸ் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.V.ஜோதிலட்சுமி, உதவி ஆய்வாளர் செல்வி.R.S.கௌசிகா, தலைமைக்காவலர்கள் திரு.V.சிவபாண்டியன் (த.கா.26590), திரு.K.சுகுமார் (த.கா.26611), காவலர் திரு.T.சங்கர்தினேஷ் (.கா.39337) மற்றும் பெண்ணிடம் தகராறு செய்த நபர்களை உடனடியாக கைது செய்த C-1 பூக்கடை காவல் நிலைய சுற்றுக் காவல் வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் திரு.V.கோட்டீஸ்வரன், C-1 பூக்கடை காவல் நிலைய ரோந்து வாகன ஓட்டுநர்/ இரண்டாம் நிலைக்காவலர் திரு.A.மணிவண்ணன் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று (24.12.2019) நேரில் அழைத்துப்பாராட்டி வெகுமதி வழங்கினார்.

About Admin

Check Also

அண்ணாசதுக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் கைது.

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து, அதிக அளவில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *