Sunday , December 15 2019
Home / Uncategorized / சாம்சங் வென்ச்சர் முதன் முதலில் இந்தியாவில் முதலீடுகள் செய்கிறது;

சாம்சங் வென்ச்சர் முதன் முதலில் இந்தியாவில் முதலீடுகள் செய்கிறது;

குருக்ராம், இந்தியா – ஜூலை 10, 2019 -எதிர்காலத்துடன் தொடர்புடைய தொழில்களின் மீது முதலீடு செய்வதன் மூலம், சாம்சங்கின் முதலீட்டுக் கரமாக திகழ்கின்றன, சாம்சங் வென்ச்சர் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் (SVIC), இன்று இந்தியாவில் முதன் முதலில் தான் செய்யும் முதலீடுகள் பற்றி அறிவித்துள்ளது. அதாவது மொத்தம் 8.5 USD-களை நான்கு இந்திய தொடக்கங்களில் முதலீடு செய்கிறது.

நூதனமுறைகளின் தலைவராக இருப்பதால், உலகம் முழுவதிலும் மற்றும் இந்தியாவிலும் புதுமையான மற்றும் பயன்னுள்ள தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக ஈடுபட்டுள்ள பல தொடக்க நிறுவனங்களுடன் சாம்சங் ஒன்றிணைந்து செயல்படுகிறது. நிறுவனத்தின் முதலீட்டு கரம், ஒரு கணிணி செயலிகளின் நிறுவனமானOSLabs (இண்டஸ் OS), பேச்சு தொழில்நுட்ப தொடக்கமான Gnani.ai, IoT க்கு தீர்வுகள் வழங்கும் சில்வன் இன்னோவேஷன் லேப்ஸ் மற்றும் ஆரம்ப கட்ட கணினி விஷன் தொடக்கங்கள் ஆகியவற்றில் தனது முதலீடுகளை செய்ய முடிவெடுத்துள்ளது.

OSLabs, இண்டஸ் ஆப் பசார் என்னும் ஒரு க்யூரேட்டட் செயலிகளின் ஸ்டோரை உருவாக்கியுள்ளது. இது 400,000 க்கும் மேற்பட்ட மொபைல் செயலிகளின் தொகுப்பை பல இந்திய மொழிகளில் கொண்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த Gnani.ai, இந்திய மொழிகளில் குரல் உதவியாளர்கள் மற்றும் பேச்சு பகுப்பாய்வுகளை உருவாக்குவதற்காகவும், தானியங்கி பேச்சு ஏற்பளிப்பு மற்றும் இயற்கையாக மொழியை செயலாக்குதல் ஆகிய பிரிவுகளில் வேலையில் ஈடுபட்டுள்ளது. இன்று மனிதர்கள் இயந்திரங்களை தொடர்பு கொள்வதற்கு தானியங்கி பேச்சு ஏற்பளிப்பு என்னும் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகும். மேலும் வட்டாரப் பேச்சுமொழிகளில் தானியங்கி பேச்சு ஏற்பளிப்பின் (ASR) தேவை அதிகரித்து வருகிறது.

மற்றொறுபுரம், சில்வன் இன்னோவேஷன் லேப்ஸ் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கான IoT தீர்வுகளை வழகுவதில் முன்னணியில் உள்ளது. மேலும் ஸ்மார்ட் இடங்களுக்கான தீர்வுகளை அளிப்பதில் வல்லுனராக திகழ்கின்றது. இந்த தொடக்கமானது பாதுகாப்பு, காப்புதிறன், சௌகரியம், வசதி மற்றும் ஆற்றல் மேலாண்மை ஆகியவற்றை பற்றிய தீர்வுகளை வழங்குகிறது.

“இந்திய தொடக்க சூழ்நிலையமைப்பு கடந்த சில ஆண்டுகளில் ஆரம்ப கட்ட நிறுவனங்களால் வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, IoT, கிளவுட் மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் சேவைகள் போன்ற துறைகளில், அந்த நிறுவனங்கள் லைன் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளின் மேல் செயல்படுகின்றன. சாம்சங் இந்திய தொடக்க நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவும் முதலீடு செய்யவும் உறுதி எடுத்துடுள்ளது. இது இருவருக்கும் ஒரு வெற்றியாக இருக்கும், ஏனெனில் இந்த ஆழ்ந்த ஈடுபாட்டின் மூலம் தொடக்க நிறுவனங்கள் தங்கள் தீர்வுகளை விரிவுபடுத்தி கொள்ள ஒரு வாய்ப்பைப் பெறுவதால், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் சேவைகளை எங்களால் மேலும் வளப்படுத்தி அளிக்க முடியும் ”என்று கூறினார் பெங்களூரு சாம்சங் R&D இன்ஸ்டிடியூட் கார்ப்பரேட்டின் துணைத் தலைவரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான டாக்டர் அலோக்நாத் தே.

SVIC இந்திய தொடக்கங்களில் மேற்கொண்டுள்ள நான்கு முதலீடுகளும் யுக்திசார் இயல்புடையவை. இண்டூஸ் ஆப் பஜார் வழங்கும் புதிய கேலக்ஸி ஸ்டோரை அறிமுகப்படுத்த ஓஎஸ் லேப்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது சாம்சங். இது ஆங்கில மொழியில் மட்டுமல்லாமல் கூடுதலாக 12 உள்ளூர் இந்திய மொழிகளில் செயலிகள் கண்டுபிடிப்பு மற்றும் பதிவிறக்க அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருகிறது. மேலும் கட்டாய உள்நுழைவு இல்லாமல் தனிப்பயனாக்கப்பட்ட செயலிகளின் பரிந்துரைகளை வழங்குகிறது. இதேபோல், ஞானியின் ASR எஞ்சினில் சாம்சங் முதலீடு செய்திருப்பது எதிர்காலத்தில் சாம்சங்கின் பிக்ஸ்பி வட்டாரமொழி சேவையை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. 6,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 12 நேரடி சமூகங்களின் நிறுவப்பட்ட தளத்துடன், சில்வானின் தயாரிப்புகள் மற்றும் IoT இயங்குதளம் சாம்சங்கின் அனைத்து IoT தயாரிப்புகளையும் 2020-க்குள் தயாராக்க உதவும்.

“உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் பிராண்டின் VC பிரிவான சாம்சங் வென்ச்சர், எங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்வது எங்களுக்கு பெருமை சேர்க்கும் ஒரு தருணமாக உள்ளது. இண்டஸ் அனுபவத்தை அதிக அளவிலான பார்வையாளர்களுக்கு வழங்க நாங்கள் விரும்பி கொண்டிருந்த சமயத்தில், இந்த முதலீட்டு நிதிகள் 100 மில்லியன் இந்திய பயனர்களை அவர்கள் விரும்பும் மொழியில் உள்ளடக்கம் மற்றும் வர்த்தக தளத்துடன் மேம்படுத்துவதற்கான எங்கள் இலக்கை அடைய உதவியாக இருக்கும். இதனால் உண்மையான டிஜிட்டலுக்கு உள்ளான வளர்ச்சியையும் மேம்பட்ட பயனர் அனுபவத்தையும் அனைவருக்கும் அளிக்கப்படும் என்பது உறுதி செய்யப்படுகிறது,” என்று கூறினார், OS Labs-ன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ராகேஷ் தேஷ்முக்.

“எங்கள் திறன்களின் மீது இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்திய சாம்சங் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவிக்க விரும்புகிறோம். இந்த முதலீடு பேச்சு ஏற்பளிப்பு தொழில்நுட்பங்களில் எங்கள் நிபுணத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்திய மொழிகளில் குரல் உதவியாளர், தானியங்கி அழைப்பு மற்றும் பேச்சு பகுப்பாய்வு போன்ற பல வாடிக்கையாளர்களுக்கான பயன்பாடுகளில், முன்னணி பேச்சு ஏற்பளிப்பு என்ஜினாக தொடர வேண்டும் என்ற எங்கள் குறிக்கோளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், ” என்று கூறினார் Gnani.ai யின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான கணேஷ் கோபாலன்.

“IoT ஒரு பெரிய மற்றும் சிக்கலான சந்தை ஆகும். மேலும் சந்தை தேவைகளை பூர்த்தி செய்ய நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் துணைநிற்க யுக்திசார்ந்த கூட்டமைப்பு தேவை. அந்த நோக்கத்திற்காக, பல்வேறு சந்தைகளில் அவர்கள் பங்காற்றுவதாலும் மற்றும் அவர்களின் ஆழ்ந்த புரிதலின் காரணமாகவும், சாம்சங் வென்ச்சருடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார் சில்வன் இன்னோவேஷன் லேப்ஸ்-ன் தலைமை நிர்வாக அதிகாரி அவினாஷ் கே க கௌதம்.

புதிய வளர்ச்சி எஞ்ஜின்களாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படும் புதிய மற்றும் வித்தியாசமான தொழில்நுட்பங்களை அடிப்படையாக கொண்ட எதிர்கால நோக்குடைய தொழில்களில் SVIC தீவிரமாக முதலீடு செய்கிறது. புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் ஈடுபடும் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக இது நிறுவப்பட்டது. மார்ச் 2019 நிலவரப்படி, SVIC 2.2 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சொத்துக்களை அதன் நிர்வாகத்தின் கீழ் கொண்டுள்ளது.

மக்களுக்கு என்ன தேவை மற்றும் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைப் பற்றிய ஆழமான புரிதலின் அடிப்படையில் ஒரு எதிர்காலத்தை சிறந்ததாக மாற்ற, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தனது தொழில்நுட்பத்துடன் இன்று புதுமைகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில், சாம்சங் உலகளவில் தனது 36 R&D மையங்கள் மூலம் R&D நிறுவனத்தில் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் முதலீடு செய்தது. அத்துடன், அதன் எதிர்கால வளர்ச்சியைத் தூண்டும் செயற்கை நுண்ணறிவு (AI), 5 ஜி, ஆட்டோமோட்டிவ் எலக்ட்ரானிக்ஸ் கூறுகள் மற்றும் பையோ மருந்து வகைகள் போன்ற துறைகளில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 22 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவிருப்பதாகவும் அறிவித்தது.

About Admin

Check Also

The Kings of square a district level chess competition organised by RYA

Chennai Food Bank (CFB)an ISO 9001 : 2015 certified, a project of RYA Madras Metro …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.