Tuesday , October 22 2019
Home / State-News / கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம், வர்த்தகர் அணி சார்பில் விழா

கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம், வர்த்தகர் அணி சார்பில் விழா

கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம், வர்த்தகர் அணி சார்பில் கோவை 100 -வார்டு 100 அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் முதல் விழா

45-வது வார்டு முதல் அறிமுக துவக்க விழா

கோவை மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் வர்த்தகர் அணி கோவை மாவட்டம் இணைந்து கோவை 100 வார்டு உள்ள 100 அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றியும் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கவும் விதமாக முதல் அறிமுக துவக்க விழா கோவை மாநகராட்சி 45-வது வார்டு சங்கனூர் அரசு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதல்கட்டமாக துவங்கப்பட்டது.

இவ்விழாவை மாவட்ட துணைச் செயலாளர் வர்த்தகர் அணி நா.முருகேசன் ஏற்பாட்டில், 45-வது வார்டு துவக்கத்தை சங்கனூர் மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சுமதி 100 வார்டு 100 பள்ளி கல்வி உபகரணங்கள் வழங்குதல் புகைபடத்தை வெளிட்டார்.

அதனை மாவட்ட செயலாளர் வர்த்தகர் அணி எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் நா.முருகேசன் துணை செயலாளர் திருநாவுக்கரசு, துணை செயலாளர் திருமாலை ரவி அபிமன்யு, சூலூர் முரளி ஆகியோர் பெற்று கொண்டனர்.

அதையடுத்து தலைவர் ரஜினிகாந்த் கூறிய “பூமியில் நடமாடும் பூக்கள், குழந்தைகள், நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் தான் என்ற வாசகமிட்ட 1000 நோட்டு புத்தகங்கள் மாணவ, மாணவிகள் வழங்கப்பட்டது.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஒவிய போட்டியில் வெற்றி பெற்ற 1அம் வகுப்பு முதல் 8அம் வகுப்புக்கான முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசுகளை மாணவ, மாணவிகள் வழங்கப்பட்டது.

போட்டியில் கலந்து அனைவருக்கும் பதக்கம் வழங்கினார்.

இவ்விழாவிற்கு அண்ணாதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர், படையப்பா செந்தில் இளைஞரணி மாவட்ட செயலாளர்,
கார்த்தி மாவட்ட துணைச் செயலாளர் இளைஞர் அணி,
கீதா கலைவாணி மகளிர் அணி மாவட்ட செயலாளர்,
டி.செந்தில் பொறியாளர் அணி மாவட்ட செயலாளர்,
வடக்கு மண்டல செயலாளர் ராஜ்குமார்,
மேற்கு மண்டல செயலாளர் சக்தி,
அன்னூர் ஒன்றிய செயலாளர் ரஜினி வெங்கட் மற்றும் ராஜீவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பள்ளி ஆசிரியர்கள், குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழா முடிவில் “கல்விகற்போம் இடைநிற்றலை தவிர்போம்” என்று அனைத்து மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி expressnews.asia
9486060649

About Admin

Check Also

அப்துல் காலம் நினைவு தினம்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.