Sunday , March 29 2020
Home / State-News / கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமான் ஜடாவத் இ.ஆ.ப அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்களிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 63 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இதில் சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தார்.

இக்கோரிகை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இக்கூட்டத்தில், மண்டல உதவி ஆணையர்கள் தி.ரவி,அண்ணாத்துரை, ம.செல்வன், மகேஷ்கனகராஜ், மாநகனப்பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் பார்வதி, செயறியாளர் (திட்டம்) எஸ்.ரவிச்சந்திரன், உதவி நகர்நல அலுவலர் வசந்த் திவாகர், கணக்கு அலுவலர்கள் லட்சுமிபிரபா (குடிநீர் பிரிவு), மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில்
கோரிக்கை மனுவை கோவை காட்டூர் காளிஸ்வரா நகர் குடியிருப்போர் நலச்சங்க சார்பில் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியதாவது
கோவை காளீஸ்வரா நகர் பகுதியில் மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் குடியிருப்பு உள்ளது. குடியிருப்பு பின் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை, குழாய்கள் பழுந்தடைந்துள்ளது.
முனிசிபல் காலனியில் உள்ள மழைநீர் வடிகாலில் மண்டல அதிகமாக உள்ளதால் மழைநீர் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது.

மேலும் மாநகராட்சி குடியிருப்பில் கடந்த 50 வருடங்களாக மாநகராட்சி ஒதுக்கப்பட்ட குடியிருப்பு வசித்து வருகின்றனர். இதில் 25 குடியிருப்பு உள்ளது.
1984 வருடம் குடியிருப்புவார்களுக்கு சொந்தமாக செய்து கொடுக்கப்பட்டது.
இதில் 17 குடியிருப்பில் உள்ளவர்கள் பணம் செலுத்தியும் மாநகராட்சி பத்திரம் செய்து கொடுக்கப்படவில்லை.
இந்த குடியிருப்பவர்களுக்கு மாநகராட்சி மூலம் பாத்திரங்கள் தருமாறு மனுவில் கூறியுள்ளனர்.

கோவையிலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி

About Admin

Check Also

EssEmm Corporation Unveiled COSMOS HI-TECH KITCHEN MACHINES

Coimbatore, 5th Nov 2019: EssEmm Corporation today unveiled its latest product offering under their Cosmos …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *