Sunday , December 16 2018
Home / National-News / கோவையில் சடுகுடு லீக் போட்டி

கோவையில் சடுகுடு லீக் போட்டி

கோவை பிரஸ் கிளப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் ராமச்சந்திரன், தண்டபாணி, மயில்சாமி,சபி இவர்கள் கூறிகையில் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கோவை மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்துடன் நவபிரவர்தனா இவண்ட் டூல்ஸ் இணைந்து நடத்தும் கோவை மாவட்ட கபடி அணி தேர்வு போட்டி கோவை நடைபெறுகிறது. கோவை சுற்றியுள்ள 228 கிராமப்புற நகர்ப்புறங்களில் சடுகுடு லீக் என்ற பெயரில் கபடி போட்டிகள் நடைபெற உள்ளன. கோவை இராமகிருஷ்ணா விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 6 ந் தேதியும், தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 தேதி, பொள்ளாச்சி முனிசிபல் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19 தேதி, சூலூர் பொன் விழா மைதானத்தில் 26 தேதியும் , செப்டம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் கோவை நேரு ஸ்டேடியத்திலும் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் 17, 18, 22 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். கோவை அமெச்சூர் கபடி கழகம் மூலமாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அனைத்து இந்திய கபடி போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்றனர்

About Admin

Check Also

DELHI HIGH COURT DIRECTS JSPL & FIRST CONSTRUCTION COUNCIL

New Delhi, November , 2018: The Delhi High Court in a special urgent hearing held on …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.