கோவை அருள்மிகு ஸ்ரீதண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா ராஜாபட்டர், கோவில் பூசாரிகள் சிவக்குமார், சம்பத்குமார் ஆகியோர் முன்னிலையில், யாக சாலையில் விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், 6 – ம் கால பூஜை, திரவ்யாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோபுர கலசங்களில் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷசங்களை எழுப்பினர்.
கும்பாபிஷேக விழாவில் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதினம், அம்மன் கே.அர்ச்சுணன் எம.எல்.ஏ., புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர். சந்திரசேகர், சமூக ஆர்வலர் அன்பரசு, கோவில் தர்க்கார் மேனகா, செயல் அலுவலர் விஷ்வநாதன், முன்னாள் அறங்காவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
கோவைலிருந்து செய்தியாளர் ருக்கிவாணி Expressnews.asia expressnewsruki@gmail.com